24 special

அடச்சை இவருக்கா இந்த நிலை "தொற்றிக்கொண்டு" நிற்கும் நிலைக்கு சென்றாரே..?

Stallin and mamutha baneerji
Stallin and mamutha baneerji

திமுக பல்வேறு வழிகளில் மக்களை கவர புது புது முயற்சிகளை செய்து வருகிறது மேலும் முதல்வர் ஸ்டாலின் இமேஜ்ஜை தமிழகத்திற்கு வெளியே இந்திய அளவில் பிரபலமான தலைவராக முன்னிறுத்த அவருக்கென்று ஒரு தனி அணியே திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் அதன் ஒரு முயற்சியாக துபாய் சென்று முதலீடுகளை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தினார்.


இது ஒருபுறம் என்றால் அதன் பிறகு டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலக திறப்பு விழாவை முன்வைத்து பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஸ்டாலின் ஒரு முன் முயற்சி எடுத்தார் ஆனால் இவை இரண்டுமே பெரிய அளவில் வெற்றியை கொடுத்தா என்றால் கேள்வி குறியே துபாய் பயணத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்ய செல்கிறார் என அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டும், டெல்லியில் ஸ்டாலின் அழைப்பு விடுத்த பல கட்சி தலமைகள் வராதது என திட்டம் சொந்தபியதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால் கட்சி அலுவலக திறப்பு விழாவின் போது செல் போன் திருட்டு போன சம்பவம் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியது, இப்படி பல தகவல்களுக்கு மத்தியில் தமிழகத்தை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் ஒரு ஓரத்தில் நிற்கும் புகைப்படத்தை வைத்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அடடா பொருளாதார மேதை UPA அரசாங்கத்தில் இரண்டாவது இடம், வேட்டி கட்டிய தமிழன் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவாளர்கள் பில்ட்டப் கொடுத்த நிலையில் திமுக அலுவலகம் திறப்பு விழாவின் போது ஒரு ஓரத்தில் சிதம்பரம் நிற்பதும் அது போட்டிவில் இடம்பெற்று இருப்பதும் தற்போதைய சூழலில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடிக்கு பொருளாதார அறிவுரை என நாளுக்கு நாள் அறிவுரைகளை வழங்கி வரும் சிதம்பரத்தை முன் வரிசையில் கூட நிற்க வைக்காமல் கடைசி இடத்தில் நிற்க வைத்து இருப்பது ஏன் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.