தொடர்ந்து சர்ச்சையாக பேவரும் திண்டுக்கல் லியோனி தற்போது பட்டியல் சமுதாய மக்கள் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், இந்த சூழலில் பாஜக மாநில பட்டியல் சமுதாய தலைவர் தடா. பெரியசாமி திண்டுக்கல் லியோனி பேச்சை கண்டித்து இருப்பதுடன் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் லியோனி அரசு பதவியில் நீடிப்பது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இது குறித்து தடா. பெரியசாமி தெரிவித்த கருத்து பின்வருமாறு :-ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன், ஈவிகேஎஸ். இளங்கோவன் இவர்கள் வரிசையில் இன்று திண்டுக்கல் லியோனியும் சாதி வன்மத்தை கக்கியிருக்கிறார். அவரின் வாய்க்கொழுப்பை வன்மையாக கண்டிக்கின்றோம்.
திமுகவினரும் அதன் ஆதரவாளர்களும் தொடர்ந்து சாதி வன்மத்தோடு பேசுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும். சாதி வன்மம் கொண்ட திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக இருப்பது மிகவும் ஆபத்தானது.
எனவே திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திண்டுக்கல் லியோனி இதற்கு முன்னர் பெண்கள் இடுப்பு குறித்து பேசி கடும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை புகழ்ந்து பேச பட்டியல் சமுதாய மக்களை இழிவு படுத்த வேண்டுமா என பலரும் லியோனி கருத்திற்கு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.