பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ISIயில் பணிபுரியும் இரண்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த இருவரும் கொல்கத்தா மற்றும் பிஹார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தங்கி பாகிஸ்தானுக்காக பணிபுரிந்த கொல்கொத்தாவை சேர்ந்த ஜாபர் ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த முஹம்மது ஷம்சாத் இருவரும் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
மேலும் பல முக்கிய ராணுவ தகவல்கள் விமானப்படை தளங்கள் மற்றும் காண்ட் புகைப்படங்கள் அமிர்தசரஸில் இந்திய ராணுவ நடமாட்டம் போன்றவற்றை பேசியிருந்தது அவர்கள் இருவரின் தொலைபேசியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்கொத்தாவை சேர்ந்த ஜாபர் பாகிஸ்தானை சேர்ந்த ராபியா என்ற பெண்ணை கடந்த 2005ல் திருமணம் செய்துள்ளார்.
2012ல் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளார். அதையடுத்து 2012ம் ஆண்டே லாகூரில் உள்ள தனது மனைவியின் தாயார் வீட்டிற்கு ரியாஸ் குடிபெயர்ந்துள்ளார். லாகூரில் உள்ள ISI உளவு அமைப்புடன் அங்கிருந்தபோது தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னர் ISI உளவாளியாக மாறியுள்ளார் ரியாஸ். அதோடு நில்லாமல் தனது நண்பரும் பீகாரை சேர்ந்தவருமான ஷம்சாத்தையும் ISI இல் இணைத்தார்.
இவர்கள் இருவரும் கூட்டாக முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை ISIக்கு பரிமாறியுள்ளனர். இருவரையும் கொத்தாக தூக்கிய போலீசார் டெல்லி நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளனர்.