24 special

சுபவீ இப்போ தெரிகிறதா? மௌன விரதத்தின் அருமை..! வந்தால் தான் புரிகிறது..!

Subavee
Subavee

இந்து மதத்தின் ஒவ்வொரு சாத்திர சம்பிரதாயங்களை நாத்திக அமைப்புகள் கிண்டல் செய்வது உண்டு விரதம் இருப்பது தொடங்கி சூரிய கிரகணம் முடியும் வரை சாப்பிடாமல் இருப்பது என பல இந்து மத நம்பிக்கைகளை திக மற்றும் பிற நாத்திக அமைப்புகள் காலம் காலமாக கிண்டல் செய்து வருவது வழக்கம்.


அதில் இந்துக்கள் மாதம் ஒருமுறை கடைபிடிக்கும் மெளன விரதம் குறித்து கிண்டல் கேலி என செய்தவர்கள் இன்று தங்களே மெளன விரதம் இருக்கும் சூழலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் சுபவீ அவருக்கு திடீர் என பேச்சு வராமல் போனதாகவும் மாதம் இருமுறை மெளனம் இருக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார் சுபவீ.

இது குறித்து சுப வீரபாண்டியன் குறிப்பிட்டது பின்வருமாறு :-  பேசாமல் இருப்பதற்கும், பேச்சே வராமல் போவதற்குமான இடைவெளி அவ்வளவு சிறியதன்று. அப்படிப் பேச்சே வராமல் போன ஒரு நிகழ்வு 10,12 ஆண்டுகளுக்கு முன்னால்  ஒருமுறை வந்து போயிற்று. அந்த இரவு நான் நெய்வேலியில் இருந்தேன். தொடர்ந்து ஏழு, எட்டு  நாள்கள் பொதுக்கூட்டம். அன்று மாலையும் நெய்வேலியில் பேசி முடித்திருந்தேன். அடுத்த நாள் காலை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே பேச வேண்டும். 

அந்த இரவில்தான், பேசும்போது காற்று மட்டும் வந்தது. ஒலி எதுவும் வரவில்லை. உடனிருந்த தோழர்கள் முரளி, முகிலன் இன்னும் சிலர் பதறிப் போய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை, ஓரளவு பேச முடிந்தது. பகலில் மாணவர்களிடம் அரை மணி நேரம் பேசினேன். 

இப்போது மீண்டும். ஏப்ரல் 5 அதிகாலை எழுந்தபோது பேச்சு வரவே இல்லை. இம்முறை 24 மணி நேரம் என்னிடமிருந்து எந்த ஒலியும் வரவில்லை. குரல் முற்றுமாய்ப் போய்விட்டதோ என்று தோன்றியது. 

குரல் - என் வாழ்வின் ஒரு பகுதி. பிரிக்க முடியாத ஒரு பகுதி.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மேடைகளிலும், ஊடகங்களிலும் ஒலித்த குரல். திடீரென்று ஒருநாள், என்னைவிட்டு அது போய்விடக் கூடும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி ஓர் ஐயம் வந்தபோது கவலைப் பட்டேன் என்பதை விட, கொஞ்சம் கலங்கிப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை. 

மருத்துவர்கள் - குறிப்பாக எங்கள் குடும்ப மருத்துவர் முத்தையா, இன்னும் இரண்டு, மூன்று நாள்களில்  100 விழுக்காடு சரியாகி விடும் என்று உறுதியாய்ச் சொன்ன பிறகுதான்,  ஒரு நம்பிக்கை வந்தது.  இப்போது சற்று முன்னேற்றமும் தெரிகிறது. 

குரலின் ஒலி  குறைந்த நேரத்தில், நண்பர்களின் அன்பு கூடியது, குவிந்தது. "உடம்பு தன்னையும் மதிக்கச் சொல்லுது" என்று செய்தி அனுப்பியிருந்தார் பேராசிரியர் கவிதா. அதுவும் உண்மைதான். 

சரியாகிவிடும். இன்னும் சில நாள்களில் மீண்டும் என் குரல் உங்களை வந்து தொடும். எனினும், கவனமாக இல்லையென்றால் மீண்டும் வருவதற்கு வாய்ப்புண்டு என்ற மருத்துவர்களின்  எச்சரிக்கை இருக்கவே செய்கிறது.  மேடைப் பேச்சு மட்டுமில்லை, தொடர்ந்த அலைபேசி உரையாடல்களும் தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 

குறைவான அளவில் மட்டுமே கூட்டங்கள், குறைந்த நேரம் மட்டுமே அலைபேசியில் என்று முடிவெடுக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறையேனும் முழுநாள் மௌனம் என்பதையும்  எண்ணிப் பார்க்கச் சொல்லியுள்ளனர். 

முடிவெடுத்தே ஆகவேண்டும்! இல்லையேல் குரல் நாளங்கள் தாமாக ஒரு முடிவெடுத்து விடக்கூடும் என் மனைவி சொல்வார், "ஒன்னு நேர்ல பேசுறீங்க, இல்லே, போன்ல பேசுறீங்க, அதுவும் இல்லேன்னா, மேடையில அல்லது டிவியில பேசுறீங்க. ஏதோ ஒரு வடிவத்துல பேசிக்கிட்டே இருக்கீங்க. அப்புறம் அந்தக் குரல் என்னதான் செய்யும்?"

அவர் சொல்வது உண்மைதான். கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. முற்றுமாய்க் குரலை இழந்து, குரலற்ற தனிமையில் வாழ்வது கடினம் என குறிப்பிட்டுள்ளார் சுபவீ.  சொன்னால் புரியாது பட்டால்தான் புரியும் எனவும் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படியுங்கள் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கும் என பலரும் சுபவீக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.