24 special

காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த பிஜேபி..! வேட்பாளர் யார் தெரியுமா..?


பஞ்சாப் : அரசியல் கட்சிகளின் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் என பரவலாக பேசப்படுவதுண்டு. ஆனால் பிஜேபி விஷயத்தில் எல்லாமே புதிர். கடைநிலை தொண்டரை யாருக்கும் அதிக பரிச்சயமில்லாத ஒருவரை தலைவராக மாற்றி அழகு பார்க்கும். அதேபோல இடைதேர்தலோ பொதுதேர்தலோ மக்களவை தேர்தலோ இவர்தான் வேட்பாளர் என கணிக்கமுடியாத அளவில் அதன் செயல்பாடுகள் இருக்கும்.


இந்நிலையில் மக்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவரை பஞ்சாப் வேட்பாளராக பிஜேபி முன்னிறுத்தியுள்ளது. பஞ்சாப் அரசியலில் இது திகைப்பை உண்டுபண்ணியுள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அந்தந்த மாநில கட்சிகள் முன்னிறுத்தி வருகின்றன. ஜூன் 10 அன்று நடைபெற இருக்கும் இந்த தேர்தலுக்கு பல முக்கியப்புள்ளிகளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள துரி தொகுதியில் முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த இடம் காலியானது. அந்த தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய இன்று கடைசிநாளாகும். வாக்குப்பதிவு ஜூன் 26 அன்று நடைபெற உள்ளது.

பிஜேபி இந்த இடைத்தேர்தலுக்கு வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேவல் சிங் தில்லானை களமிறக்கியுள்ளது. இந்த தில்லான் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. துரி தொகுதியை கைப்பற்றிவிட ஆம் ஆத்மீ முயற்சிக்கையில் தொகுதியில் நன்மதிப்பை பெற்ற தில்லானை வேட்பாளராக்கி பிஜேபி மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மீயின் வேட்பாளரான பகவந்மானை எதிர்த்து கேவல் சிங் தில்லான் போட்டியிட்டிருந்தார். மேலும் மூன்றுலட்சம் வாக்குகள் பெற்று கடும் நெருக்கடியை கொடுத்திருந்தார் தில்லான். இந்நிலையில் மீண்டும் பிஜேபி சார்பாக களமிறங்குவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தில்லானை வேட்பாளராக்க அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.