புதுதில்லி : கடந்த வாரம் உத்திரபிரதேச மாநில பிஜேபி தலைவர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கான்பூர் பகுதியை சேர்ந்த சிறுபான்மையினர்கள் சிலர் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளை மூடக்கோரியும் நுபுர் சர்மாவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கடைகளை மூடச்சொல்லி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இருபிரிவினருக்கிடையே வன்முறை வெடித்தது. வன்முறையை தடுக்கமுயன்ற 13 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். நிலைமை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வன்முறைகள் மேலும் பரவாமல் இருக்க போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ள விஷமத்தனமான கருத்து இந்தியாவை கொந்தளிக்க செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷோபாஸ் ஷெரிப் " நமது அன்பிற்குரிய நபிகள் பற்றி கூறிய பிஜேபி தலைவரின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.மோடியின் கீழ் நடக்கும் ஆட்சியில் இந்தியா மத சுதந்திரங்கள் குரல்வளையை நெரிக்கிறது.
இஸ்லாமிய மக்களை தொடர்ந்து துன்புறுத்திவருகிறது. உலகம் இந்தியாவை உற்றுநோக்கவேண்டும் கடுமையாக கண்டிக்கவேண்டும்" என நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி கடுமையாக பாகிஸ்தான் பிரதமரை சாடினார்.
அவர் செய்தியாளர்களிடம் " சிறுபான்மையினரின் உரிமைகளை பறிப்பவர்கள் மற்றொரு நாட்டில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து பேசுவது அபத்தம். பாகிஸ்தானால் சீக்கியர்கள் ஹிந்துக்கள் அஹமதியாக்கள் உட்பட பல சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதிற்கு இந்த உலகம் சாட்சியாக நிற்கிறது.
இந்தியா மட்டுமே அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கிறது. உயர்ந்த மரியாதையை அளிக்கிறது.இந்தியாவின் மதநல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு பாகிஸ்தானின் சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்தவேண்டும்" என அரிந்தம் பாக்க்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.