அதிமுகவில் நடைபெற்றுவரும் திருப்பங்கள் தமிழகத்தை தாண்டி டெல்லியின் கதவுகளை தட்டும் சூழலுக்கு சென்று இருக்கிறது கடந்த வாரம் டெல்லி சென்று இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக மூத்த தலைவர் ஒருவர் கேட்ட மூன்று கேள்விகளால் கடும் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக தமிழகம் திரும்பினார்.
அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர் தம்பித்துறை மூலம் டெல்லியில் உள்ள பாஜக மூத்ததலைவர் ஒருவரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு இருந்ததாம் ஆனால் இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மூன்று முக்கிய காரணங்களை பாஜக அடுக்கி இருக்கிறது,அதிமுகவின் உள் விவாகரங்களில் தலையிடும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை, கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே இப்போதுவரை நாங்கள் நினைக்கிறோம், ஆனால் உங்களிடம் அந்த நேர்மை இல்லை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை, பன்னீர் செல்வம் அவரது செல்வாக்கால் தேனியில் அவரது மகனை வெற்றி பெற செய்துள்ளார்.
அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்களின் இடங்களுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் மட்டும் எப்படி உங்களால் வெற்றி பெற முடிந்தது என்று முதல் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
அடுத்ததாக கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கடைசி நேரம் வரை பாஜகவை கூட்டணிக்கு அழைக்காமல் இருந்தது ஏன்? பாஜக மாநில நிர்வாகிகள் இட ஒதுக்கீடு குறித்து பேச வந்தபோது நீங்கள் ஏன் சேலம் சென்றீர்கள், போதுமான அளவு பாஜக தமிழகத்தில் வளர கூடாது என நீங்கள் செய்த அனைத்து தகவலையும் அமிட்ஷா சேகரித்து வைத்து இருக்கிறார்.
உங்களிடம் தனியாக பேச இப்போது விரும்பவில்லை என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் கூறிவிட்டார்கள் என மிக மூத்த பாஜக டெல்லி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் செய்தியை கூற அந்த நிமிடமே டெல்லியில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதை அனைத்தையும் தாண்டி கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது அமித்ஷா சென்னை வந்த போது ஈபி எஸ் மற்றும் ஓபிஎஸ் என இருவரும் அமிட்ஷாவை சந்தித்து பேசினர், அப்போது அமிட்ஷா சசிகலா, தினகரன் இருவரையும் கட்சியில் அல்லது கூட்டணியில் சேர்த்து கொண்டு திமுகவிற்கு எதிராக ஒரே அணியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்புகள் உறுதியாக இருக்கும் என அமிட்ஷா கூறி இருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை மறுத்து நிச்சயம் 1% வாக்குகள் கூட TTV தினகரனிடம் இல்லை சசிகலா கட்சியில் இணைந்தும் ஒன்று ஆகப்போவது இல்லை நிச்சயம் அவர்கள் இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவேன் என எடப்பாடி அழுத்தி கூறி இருக்கிறார்.
ஆனால் பாதி இடங்களில் அதிமுக தோல்வியை தழுவ அமமுக பிரித்த வாக்குகள் முக்கியமானதாக மாறியது, மேலும் கொங்கு மண்டலத்தை தவிர்த்து அதிமுக மற்ற இடங்களில் தோல்வியை தழுவியது, இது குறித்தும் கடும் அதிருப்தியில் டெல்லி பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.
உங்களுக்கு தேவை என்றால் நாங்கள் வேண்டும் ஆனால் எங்கள் கட்சி வளர கூடாது என அனைத்தையும் செய்வீர்கள்.. போதாத குறைக்கு உங்கள் ஆதரவாளர்கள் கேபி முனுசாமி உள்ளிட்ட பலர் எங்களை மேடைகளில் விமர்சனம் செய்யவும் தூபம் போடுவது யார் என எங்களுக்கு நன்றாக தெரியும் எனவும் பாஜக தரப்பு அழுத்தி கூறி இருக்கிறது.
இதயடுத்துதான் என்ன ஆனாலும் பரவாயில்லை சின்னமே முடங்கினாலும் சந்திக்க தயார் என்ற அதிரடி முடிவிற்கு எடப்பாடி தயாராகி இருப்பதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் பிரதமர் வருகின்ற 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார், முதலில் ஒருநாள் பயணமாக திட்டமிடப்பட்ட பிரதமரின் பயணம் தற்போது இரண்டு நாள் பயணமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது, இந்த சந்திப்பின் போது ஈபி எஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரதமரை சந்தித்து பேச நேரம் கேட்டு இருப்பதால் இன்னும் மூன்று நாட்களில் அதிமுக குறித்து பாஜக என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.
மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவின் காரணமாக இனி அதிமுகவில் அவரது எதிர்காலம் என்ன ஆகும் என்பதே கேள்வி குறியாகி இருக்கிறது.