இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முருமு நேற்றைய தினம் முறைப்படி இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி ஏற்று கொண்டார், இந்தியாவின் முதல் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையை திரௌபதி பெற்றார்.
நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரௌபதி முர்முவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சற்று வித்தியாசமான முறையில் திரௌபதி முருமுர்விற்கு வாழ்த்து கூறி இருந்தார் அதில்,
இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள திரௌபதி முருமு அவர்களுக்கு எமது வாழ்த்துகள். மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள் மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம்.ஏமாறக் கூடாது நவ திரௌபதி என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மகாபாரதத்தில் நாட்டையும், திரௌபதியையும் சூழ்ச்சியால் அடைய துடித்த கௌரவர்களை கிருஷ்ண பரமாத்மா வீழ்த்தினார்.
நவபாரதத்தில் சூழ்ச்சியால் நாட்டை பிளக்க நினைக்கும் கௌரவர்களை வீழ்த்தி கொண்டிருக்கிறார் நவீன கிருஷ்ண பரமாத்மா நரேந்திர மோடி என பதிலடி கொடுத்துள்ளார் நாராயணன் திருப்பதி. புராணத்தை மேற்கோள் காட்டிய திருமாவளவனுக்கு அதே பாணியில் நாராயணன் திருப்பதியும் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.