பிரதமர் தமிழகம் வரவுள்ள சூழலில் மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, வருகின்றன 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழகம் வருகிறார், இந்த நிகழ்ச்சியின் போது பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் என இருவர் தரப்பிலும் நேரம் கேட்கப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் என்றால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு தகவல் ஒன்றை கொடுத்து இருக்கிறார் அதில் நாங்கள் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம், அவர் ஆளும் திமுக அரசுடன் சேர்ந்துகொண்டு எங்களுக்கு எதிராக செயல்படுகிறார் எனவும் அதனால் வேறு வழியின்றி பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் சூழலுக்கு தள்ளபட்டோம் என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த சூழலில் பன்னீர் செல்வம் தரப்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு சென்று இருக்கிறது, எங்களை திமுகவுடன் தொடர்பில் இருப்பது போன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சித்தரிக்கிறது, உண்மையில் திமுகவுடன் தொடர்பில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாய்ப்பே இல்லை என்ற 10.5% இட ஒதுக்கீடு குறித்து தன்னிச்சையாக செயல்பட்டு எடப்பாடி சட்டம் கொண்டுவந்தார்.
இதனால் தென் மாவட்டங்களில் பெரும் தோல்வி கிடைத்தது, மாறாக இன்று வன்னியர்களுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை, இவை அனைத்தையும் தாண்டி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வலுவான வேட்பாளரை முதலில் அறிவித்தது, இதனால் அவரது வெற்றிக்கு பாதிப்பு உண்டாகும் என திமுக தலைமையிடம் பேசி டம்மியான வேட்பாளரை மாற்றினார்கள்.
அதற்கு பரிகாரமாக உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் அந்த தொகுதியில் வாக்கு வங்கி இல்லாத பாமாவிற்கு சீட் ஒதுக்கினார்கள், இருவரும் இது மட்டுமல்ல KP. முனுசாமி 20 ஆண்டுகள் அரசிற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து பெட்ரோல் பங்கு கட்டியுள்ளார். திமுக அரசும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கியுள்ளது எனவும் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்ட பாஜக மேலிட தலைமை தமிழகத்தில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகள் இருவரையும், பத்திரிகையை துறையை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் கள நிலவரம் குறித்து கேட்டு அறிந்து இருக்கிறார்கள், அதில் முக்கியமான ஒருவர், திமுகவை எதிர்க்க வலுவான தலைமை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவிப்பது அனைத்தும் போலி.
பாஜக வளர்ச்சி தமிழகத்தில் சாமானியர் மத்தியிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது, அண்ணாமலை எளிதில் மக்களை கவரும் தலைவராக உருவெடுத்து வருகிறார். மேலும் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி இருக்கும் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை வரவு அதிமுகவை ஆட்டம் காண செய்துள்ளது. இது மட்டுமின்றி வட மாவட்டங்களில் பாஜக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் பாமகவை கலக்கம் அடைய செய்தது.
எனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி இருவரும் வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கின்றனர், கொங்கு மண்டலம், வடக்கில் பாமக என இரண்டு பகுதிகளில் முழுமையாக வெற்றி பெற்றால் போதும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் முக்கிய தலைவர்கள் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று விடுவார்கள் எனவே நாம் ஆட்சி அமைத்து விடலாம் எனவும் ஆய்வு செய்து இருக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்தால் அன்புமணிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவும் எடப்பாடி உறுதி கொடுத்து இருக்கிறார் இதுதான் நடந்தது பாமகவில் அன்புமணி தலைமை பொறுப்பு ஏற்றது போல் எடப்பாடியும் அதனை நோக்கி நகர முடிவு எடுத்து செய்ததுதான் திடீர் குழப்பங்களுக்கு காரணம் என அந்த பத்திரிகையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில்தான் பாஜக தலைமை முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறதாம் உண்மையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? என்பதனை அறிய மூன்று குழுக்களை அமைத்து சர்வே எடுக்க உத்தரவு சென்று இருக்கிறது. மேலும் அண்ணாமலை, பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிலை படுத்தி தேர்தலை சந்தித்தால் வெற்றி சதவிகிதம் எப்படி இருக்கும் என்றும் ஆலோசனை நடைபெற்று இருக்கிறது.
ஒருவேலை பாஜக தீர்க்கமாக எடப்பாடிப்பழனிசாமி தரப்பை எதிர்க்க முடிவு எடுத்து விட்டால், அதன் உண்மையான அதிரடி தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது, இப்போதே எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கமானவர் இருவர் இடத்தில் நடத்திய சோதனையில் 500 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்ற பட்டு இருக்கிறது, மேலும் 3000 கோடி வரை பண பரிவர்த்தனை நடந்த ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே உண்மையான ஆட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறதாம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் எடப்பாடி பக்கம் இதே போன்று நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் இருப்பார்களா என்பது கேள்வி குறிதான். அதே நேரத்தில் அண்ணாமலை தீவிரமாக களப்பணி ஆற்றவும் ஆளும் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடங்கி அனைத்து முடிவுகளையும் எடுக்க டெல்லி தலைமை உத்தரவிட்டு இருப்பதால் இனிதான் உண்மையான தேர்தல் ஆட்டம் தொடங்கும் என்று அடித்து கூறுகின்றனர் பாஜகவினர்.