24 special

குடும்பத்தில் ஒருவரை பலி கொடுத்த பிறகும் திமுகவின் ஆசை அடங்கவில்லை... பகீர் தகவல் கசிந்தது...

Zafar Sadiq,Narcotics
Zafar Sadiq,Narcotics

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயன பொருட்களை சத்துமாவு மற்றும் தேங்காய் நார்கள் பாக்கெட்டில் வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரத்தை கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்த குடோனில் அதிகாரிகள் சோதனை இட்ட பொழுது போதைப்பொருள் கடலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர் மேலும் இவர்கள் சென்னையைச் சேர்ந்த முகேஷ் முஜிபர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார்!  சோதனையில் போதைபொருட்களையும் பறிமுதல் செய்தனர். 


இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போதை கடத்தல் கும்பல் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த செய்திகள் அனைத்தும் இணையங்களில் வைரலானதால் ஜாபர் சாதிக்கை திமுக பொதுச்செயலாளர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார். 

மேலும் பிப்ரவரி 26 ஆம் தேதியன்று டெல்லியில் இருக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மன் நோட்டீசை ஒட்டியது. இருப்பினும் அவர் நேரில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் ஜாபர் சாதிக்கு வீட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு சில ஆவணங்களையும் கைப்பற்றி அவரது வீட்டிற்கு சீல் வைத்து விட்டு சென்றனர். மேலும் தற்போது அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக்கின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து ஜாபர் சாதிக் தொடர்புடைய  எட்டு வங்கி கணக்குகளை முடக்கியது. 

இந்த செய்தி தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் இந்த போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்புடையது அதுவும் அவர் திமுகவின் அயலக அணி செயலாளராக இருந்தவர் என்ற செய்தியும் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இதற்கும் திமுகவிற்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கும் என்ற வகையிலான விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்து வருகிற நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தற்போது பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

அதாவது, இந்த விவகாரம் குறித்து அவர் பேசும்போது, 'உங்கள் குடும்பத்திலேயே போதைப் பொருளால் ஒரு உயிரை பலி கொடுத்துள்ளீர்களே அது உங்களுக்கு போதாதா? நான்கு மாதங்களாக அழகிரி மகன் துரை தயாநிதி அப்போலோவில் ஐஸ் யூ வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எப்படி?  கீழே விழுந்தானா கீழே விழுந்தா இப்படி அடிபட்டிருக்குமா!...இல்லை! பார்ட்டிக்கு சென்ற இடத்தில் போதைப்பொருள் தலைக்கேறி காப்பாற்றக்கூடிய கட்டத்தையும் தாண்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அதனாலே தற்போது நான்கு மாதங்களாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காகத்தான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் அவ்வப்போது அப்போலோவிற்கு சென்ற வருகிறார். மேலும்  அழகிரி அவரது மனைவி மற்றும் மற்ற பிள்ளைகள் அனைவரும் மருத்துவமனையில் தங்கி உள்ளனர் இப்படி போதைப்பொருள் புழக்கத்தால் தன் குடும்பத்திலிருந்து ஒருவர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் பொழுது எப்படி அவர்களால் இதனை ஒரு தொழிலாக மாற்றி வெளிநாடுகள் வரைக்கும் கடத்தும் முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது!! 

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அவனை நேரில் சந்தித்து மதுரையில் போட்டியிடு என்று நானே கூறியிருந்தேன் ஆனால் அடுத்த பத்தாவது நாள் டிரக் ஓவர் டோஸ் ஆகி  மருத்துவமனையில் படித்து விட்டான்! அவர்களிடம் இல்லாத பணமா முடிந்தால் அந்த மருத்துவமனையே அவர்களால் வாங்கி இருக்க முடியும்! இப்ப கூடயா புத்தி வரவில்லை உங்களுக்கு! நீங்கள் கொடுத்த ஒரு போஸ்டிங் உங்களுக்கே வினையாக மாறி உள்ளது என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ததோடு ஆதங்கத்தில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் இதன்பிறகு துரை தயாநிதி பற்றி சமூகவலைத்தளத்தில் பெருமளவு விவாதங்கள் எழுந்துள்ளன...