
இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைபாடு கொண்டவராக அறியப்பட்டவரும், டாக்கா-8 தொகுதியின் சுயேட்சை வேட்பாளருமான ஷெரீஃப் ஒஸ்மான் ஹாதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, வங்கதேசத்தில் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழல் கடும் பதற்றத்தில் உள்ளது. கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த அவரை, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர், இதனை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.இது அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்தச் சம்பவத்தால், பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து இந்தியா மீதான எதிர்ப்பலைகளும் அதிகரிக்கத் தொடங்கின.
இதற்கிடையே இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியமான மாற்றமாக, எல்லைப் பகுதிகளில் புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தமாக 14 ராணுவ தளங்கள், 62 விமானப்படை தளங்கள் மற்றும் 30 கடற்படை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதியதாக 4 ராணுவ தளங்கள் உருவாகியுள்ளது.
குறிப்பாக நம் ராணுவம் சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.புதிய ராணுவ தளங்கள் மேற்குவங்கத்தின் சோப்ரா, பீஹாரின் கிஷன்கஞ்ச், அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமைகின்றன. புதிய ராணுவ தளங்கள் போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி காரிடார், பொதுவாக “சிக்கன் நெக்” என்று அழைக்கப்படுகிறது. இந்த குறுகிய நிலப்பகுதி தான் இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிரதான பகுதிகளுடன் இணைக்கும் ஒரே முக்கிய தரை வழியாக உள்ளது. மேலும், நேபாளம், பூடான், வங்காள தேசம் ஆகிய நாடுகளுக்கு அருகிலுள்ள இந்த பகுதி, இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை பாதுகாப்பதற்காகவே பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களில் புதிய ராணுவ தளங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, நான்காவது புதிய ராணுவ தளத்தை மிசோரம் மாநிலத்தில் அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் துவாம்புய் நகரத்திற்கு அருகில் இந்த தளம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராணுவ தளம், மியான்மர் மற்றும் வங்காள தேசத்தை ஒட்டிய கிழக்கு எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.மொத்தத்தில், இந்த நான்கு புதிய ராணுவ தளங்களும் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு நிலைத்தன்மை மற்றும் பிராந்திய அமைதியை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முதன்மை இலக்காக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
வங்கதேசத்தில் இதே நிலை நீடித்தால் இந்த 4 ராணுவ தளங்களிலும் இருந்து இந்திய ராணுவம் வங்காள தேசத்தை நோக்கி செல்லும். அந்த நா ளில் வங்காள தேசம் 4 ஆக உடைத்து சிதறும். இது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அவர்கள் எந்த அளவிற்கு மதவெறுப்பால் இந்துக்களை கொடுமைபடுத்துகிறார்களோ அதற்கான பலனை விரைவில் அடைவார்கள். மேலும் உலக நாடுகள் அனைத்தும் வங்கதேசத்தத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. இதை பயன் படுத்தி இந்தியா வங்கதேசத்தை அடிக்க தயாராகி வருகிறது.
