24 special

முகநூல் பதிவு..! பிஜேபி தலைவர் அதிரடி கைது..!

Bjp
Bjp

ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிஜேபி செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள் இந்தியாவெங்கும் சிலரால் வைரலாக்கப்பட்டு சர்ச்சையானது. அதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


இருந்தாலும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அவரது உருவபொம்மைக்கு தீயிட்டும்  தூக்கிலிட்டும் தங்களது எதிர்ப்புக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ISUPPORTNUPURSHARMA என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை தனது ட்விட்டரில் பகிர்ந்த காஷ்மீரை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கடந்தவாரம் UAPA சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா கார்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி மாவட்ட குழு செயற்குழு உறுப்பினரான அனிஷா சின்ஹா கடந்த ஞாயிறன்று தனது முகநூலில் ISUPPORTNUPURSHARMAஎன பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்ந்து நேற்று முன்தினம் அவர் ஜார்கண்ட் போலீசாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர்மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295ஏ வேண்டுமென்றே தீங்கிழைக்க முற்படுத்தல், மத உணர்வுகளை சீர்குலைக்க முயல்வது , பிரிவு 153 ஏ இரு வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல் ஆகிய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் அனிஷா சின்ஹா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய போலீசார் எந்த ஒரு அசம்பாவிதமும் வன்முறையும் நடைபெறாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சைபர் க்ரைம் போலீசார் சமூக ஊடகங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். வன்முறையை தூண்டும் எந்த ஒரு செயலையும் செய்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளனர்.

செரைகேலா கார்ஸ்வான் மாவட்டபிஜேபி தலைவரான பிஜாய் மஹிதா கூறுகையில் " கடந்த உள்ளாட்சி தேர்தலில் அனிஷின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. அவரின் செய்லபாடுகள் ஆளும்தரப்பை எரிச்சலூட்டியிருக்கிறது. அதனாலேயே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அனிஷ் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.  சின்ஹா தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் போலீசார் கைது செய்திருப்பது அவர்களின் பழிவாங்கல் உணர்ச்சியை வெளிக்காட்டியிருக்கிறது" என மாவட்ட தலைவர் பிஜாய் தெரிவித்துள்ளார்.