புதுதில்லி : இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி ஆளும் கட்ச் மற்றும் எதிர்க்கட்சிகள் ஜானதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என தீவிர ஆலோசனையில் உள்ளன. இதனிடையே மஹாராஷ்டிரா கூட்டணி அரசில் அங்கம் வகிப்பவரும் கரும்பு ஆலை மற்றும் கரும்பு விவசாயிகளின் பணத்தில் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவருமான சரத் பவாரை எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மேற்குவங்க முதல்வரான மமதா தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவாரையே வேட்பாளராக்கலாம் என மமதா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை ஆம் ஆத்மீ புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரசின் தேர்வும் சரத்பவாராகவே உள்ளது. அதனால் சரத்பவாரிடம் இதுகுறித்து பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அடுத்த மாதம் மீண்டும் மமதா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ஜனாதிபதி தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதற்காக மமதா ஒவ்வொரு மாநிலத்திலும் பிஜேபியின் எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்புகொண்டு பேசிவருகிறார். இதனிடையே சரத்பவார் வெளியிட்டுள்ள அறிக்கை எதிர்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன்தினம் மமதா சரத்பவாரை நேரில் சந்தித்து பேசியிருந்த நிலையில் தேசியவாத காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான சாகன் புஜ்பால் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் " பவார் சாஹேப் குடியரசுத்தலைவர் ஆனால் ஒவ்வொரு மராத்தியனுக்கும் பெருமை. அவர்கள் நெஞ்சு பெருமிதம் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் கேள்வி என்னவெனில் நமக்கு தேவையான எண்ணிக்கை இருக்கிறதா. சரத் பவார் சாஹேப் போட்டியிடும் எண்ணத்தில் இல்லை. அவருக்கு பல அரசியல் பொறுப்புகள் இருக்கின்றன. முதலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரளட்டும் அதன்பின்னர் தேர்தலில் போட்டியிடுவதை பற்றி பேசலாம் என சரத்பவார் கூறியுள்ளார். அதனால் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என தெரிந்தபின்னரே நாங்கள் போட்டியிடுவோம்" என புஜ்பல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.