24 special

முன்னாள் பாமக "ஆதரவாளர் தமிழகத்தில்" பாஜக வளர்ச்சி குறித்து பேசிய பதிவு வைரல் !

Annamalai
Annamalai

முன்னாள் பாமக ஆதரவாளரும், இணைய ஊடக துறையில் தனி பங்களிப்பை அளித்து வருபவருமான, அம்மாசி மாணிக்கம் கடந்த கால பாஜக வளர்ச்சி குறித்தும் தற்போது அண்ணாமலை தலைமையில் செயல்படும் பாஜக வளர்ச்சி குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அது பின்வருமாறு :-


பாஜக மீது பலரும் வன்மத்தை கக்க இந்த வளர்ச்சியே காரணம்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது போல பாஜக எதிர்கட்சியாக ஊடகங்களால் சித்தரிக்கபடுவது உண்மையே. ஆனால் இதற்கு முன் இருந்ததை விட தற்போது பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

ஒரு தேசிய கட்சியின் தலைவராக மாநிலத்தில் எப்படி பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் அந்த மாதிரி அண்ணாமலை நடந்து வருகிறார். இது பிடித்து சிலர் அவர் பின்னால் போக ஆரம்பித்துள்ளனர்.அடுத்ததாக மற்ற கட்சிகளில் கிடைக்காத அதிகாரம் இங்கு கிடைக்கும் என வளரும் கட்சியான பாஜகவிற்கு போக ஆரம்பித்துள்ளனர்.

அடுத்து தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பு என்பது பிரதானமாக ஒரு வாக்கு வங்கியை கொண்டது. அதை அதிமுகவும் சரியாக கையாளவில்லை. பாமக உள்ளிட்ட கட்சிகளும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாஜக இதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதை வைத்தும் சிலர் அந்த கட்சியை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர்.இது எல்லாம் தாண்டி பிரதானமாக இருப்பது தேசிய அளவில் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால் மாநிலக் கட்சிகளை அடக்கி ஒடுக்கி தங்களை வளர்த்துக் கொள்ளத் துடிக்கிறது.

அந்த வகையில் தாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற காரணமாக இருந்த அதிமுக என்ற கட்சியை அழித்து அந்த இடத்தை தாங்கள் பிடித்துக்கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது.இதை உணர்ந்த சிவி சண்முகம், பொன்னையன் உள்ளிட்டோர் தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அதிமுக தலைமையோ மீண்டும் அடிமைத்தன போக்கையே கடைபிடித்து வருகிறது.

அரசியலில் எப்படியாவது வளர வேண்டும் என்று பாஜகவினர் முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.அதை மற்ற கட்சிகள் போட்டியாக எடுத்து வளர வேண்டுமே தவிர பொறாமையில் வார்த்தைகளை விட்டால் திமுக எதிர்ப்பு வாக்கு பிரிந்து அந்த கட்சிக்கு ஆதரவாகவே முடியும் என குறிப்பிட்டுள்ளார் அம்மாசி மாணிக்கம்.

(TNNEWS24 DIGITAL முகநூல் பக்கத்தில்   தமிழக அரசியல் களத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த மிக முக்கிய செய்திகளை வெளியிட்டு வருகிறோம் அந்த வகையில் பாஜகவை அதிமுக, பாமக என இரண்டு கட்சிகளும் திடீர். என எதிர்க்க என்ன காரணம் என்ற முக்கிய தகவலை வெளியிட உள்ளோம், மறக்காமல் முகநூல் அல்லது YOUTUBE சென்று TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.)