24 special

அண்ணா பல்கலை முதல் அரக்கோணம் வரை! கையில் உதயநிதி டாட்டூ.! திமுகபிரமுகரை காப்பது யார்! பொள்ளாச்சியை மிஞ்சிய செயல்!

udhayanithi stalin
udhayanithi stalin

தி.மு.க இளைஞரணி நிர்வாகிமீது, கல்லூரி மாணவி ஒருவர் டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார், அரக்கோணத்தையே அதிரவைத்திருக்கிறது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்த தெய்வா என்கிற தெய்வச்செயல் என்பவர்தான் புகாருக்குள்ளான அந்த நபர். தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகித்தவர் தெய்வா.



இந்த நிலையில், அரக்கோணத்துக்கு அருகிலுள்ள பருத்திப்புத்தூர் கிராமம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த பிரீத்தி என்கிற கல்லூரி மாணவி, கடந்த வாரம்  ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் மனுக்களை அளித்திருக்கிறார். அதில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்துச் சித்ரவதை, கொலை மிரட்டல் விடுத்தல் கட்சி பிரமுகர்களுக்கு இரையாக்குவது எனதிமுக நிர்வாகி  தெய்வா மீது அடுக்கடுக்காகப் புகார்களைக் கொடுத்திருக்கிறார்.


இதற்​கிடை​யில், தனது புகார் மீது போலீ​ஸார் முறை​யாக விசா​ரணை நடத்​த​வில்லை என்ற ப்ரீத்​தி​யின் குற்​றச்​சாட்டு சமூகவலை​தளங்​களில் வைரலானது. இந்​நிலை​யில், தெய்​வாவை கட்​சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கு​வ​தாக திமுக இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி அறிவித்தார்.  இதற்​கிடை​யில், தெய்​வச்​செயல் மற்​றும் அவரது மனைவி ஆகியோர் முன்​ஜாமீன் வழங்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.மனுக்​களை விசா​ரித்த நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் இருவருக்​கும் நிபந்​தனை அடிப்​படை​யில் முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளார்​.


மேலும் அரக்​கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணை​யம் தாமாக முன்வந்து விசா​ரணைக்கு எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக ஆணை​யத்​தின் அதி​காரப்​பூர்வ வலை​தளப் ​பக்கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக இளைஞரணி நிர்​வாகி மீதான குற்​றச்​சாட்​டு​களின் தீவிரத்​தன்மை மற்​றும் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வரின் அரசி​யல் தொடர்​பு​களைக் கருத்​தில் கொண்​டு, தேசிய மகளிர் ஆணை​யத் தலை​வர், உடனடி​யாக பாரபட்​சமற்ற மற்​றும் வெளிப்​படை​யான விசா​ரணையை வலி​யுறுத்தி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.


பாதிக்​கப்​பட்​ட​வரின் பாது​காப்பை உறுதி செய்​தல், சுதந்​திர​மான விசா​ரணைக் குழுவை அமைத்​தல், எந்த அரசி​யல் தலை​யீட்​டை​யும் தடுத்து பிஎன்​எஸ் சட்ட விதி​களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டியதன் அவசி​யத்தை கடிதத்​தில் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், மூன்று நாட்​களுக்​குள் முதல் தகவல் அறிக்கை நகலுடன், விரி​வான மேல்​நட​வடிக்கை குறித்த விவரத்​தை​யும் அனுப்​பு​மாறு டிஜிபியை ஆணை​யம் கேட்​டுக் கொண்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


இதைப் போல் தான் அண்ணா பல்கலை  கழக மாணவி  விவாகரத்திலும் திமுகவின் அனுதாபியான ஞானசேகரன் சிக்கினான் அந்த வழக்கிலும் காவல்துறை முறையாக நடந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது புகார் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையே வெளியானது.அதுமட்டுமில்லாமல் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வீடுகளுக்கு சென்றுள்ளார். 


தற்போது அரக்கோணம் மாணவியின் வழக்கும் இதேபோல் தான் உள்ளது புகார் கொடுத்த பெண்ணின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களை திமுகவினர் பரப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யார் அந்த சார் அந்த வரிசையில் தற்போது அரக்கோணத்தில் சிக்கிய திமுக முன்னாள் இளைஞர் அணி நிர்வாகி சார் யார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் இவரை மேலிடம் காத்துவருகிறதாம்  ஒரு அமைச்சருடன் தொடர்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.