24 special

ஆளுநர் கருத்தை வரவேற்று இந்து முன்னணி கொடுத்த "அதிரடி" அப்டேட்..!

Rn ravi
Rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார், PFI அமைப்பு தடை செய்யப்பட வேண்டியது என தெரிவித்தவர், பல்வேறு முகமூடிகளை அணிந்து PFI அமைப்பு வலம் வருவதாக அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார், ஏற்கனவே உளவுத்துறையில் வேலை செய்தவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநர் ரவியின் கருத்து பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.


இந்த சூழலில் ஆளுநரின் கருத்து குறித்து இந்து முன்னணி வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் அதற்கான காரணம் என்ன எனவும் விளக்கம் கொடுத்துள்ளது, அது பின்வருமாறு :- அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்களும் பயங்கரவாதிகளே. மேலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்திய என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியாவிற்கு மிகவும் ஆபத்தானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பி.எப்.ஐ. ஏன் தடை செய்ய வேண்டும்.. மக்கள் பார்வைக்கு சில சம்பவங்கள் நினைவு கூறுகிறோம் . கோவையில் இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் என்பவரை பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் வெட்டி கொலை செய்தனர்.

கேரளத்தில் RSS நிர்வாகி சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பி.எப்.ஐ அமைப்பினரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு ஒரு அறிக்கையை ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்கிறது.

அதில் இந்த போலி சேவை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் பி.எப்.ஐ.யில் உள்ள உறுப்பினர்கள் RSS உறுப்பினர்களை - 27 தேசியவாதிகளை படுகொலை செய்யத்துள்ளனர்.

இப்படியாக நாட்டில் பல பயங்கரவாத செயல்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அரங்கேற்றி வருகிறது.அதனால் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என அவர்களது இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.