24 special

ஜம்மு காஷ்மீரில் ஜி-20 மாநாடு..! கடுகடுக்கும் சீனா..!

Mosi
Mosi

ஜம்முகாஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மற்றும் முதன்முறையாக நடக்க இருக்கும் ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இது பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானின் பால்ய நண்பரான சீனாவும் மாநாட்டை எதிர்க்க கிளம்பியுள்ளது.


சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் சீன அரசு பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் " காஷ்மீர் விஷத்தில் சீனாவின் நிலைப்பாடு எப்போதியும் நிலையானது மற்றும் தெளிவானது ஆகும். இந்த காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பரம்பரை பிரச்சினை. ஐநாவின் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கையின்படி அது சரியாக கையாளப்படவேண்டும். 

ஒருசில ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் மேலும் நிலைமையை சிக்கலாக்குவதை தொடர்புடைய தரப்பினர் தவிர்க்க முன்வரவேண்டும்( ஜி 20 மாநாட்டை இந்தியா காஷ்மீரில் நடத்துவதை குறிப்பிடுகிறார்). நாம் அனைவரும் கூட்டாக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் சர்ச்சைகளை தீர்க்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2022 டிசம்பரில் ஜனாதிபதி பதவியேற்றபிறகு முதல் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. கடந்த 2021 ஜி 20 மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியாவின் செர்பாவாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜி 20 உலகப்பொருளாதாரங்களின் ஒரு குழு ஆகும். இதில் பலநாடுகள் உள்ளன.

இந்த குழுவில் ஆஸ்திரேலியா, சீனா,கனடா, பிரான்சு, பிரேசில், இத்தாலி,இந்தியா, மெக்சிகோ, இந்தோனேசியா, ஜப்பான், சவூதி, தென்கொரியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, அமெரிக்கா, யூரோப் ஆகிய நாடுகள் உள்ளன. ஜம்முகாஷ்மீரில் ஜி-20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்த இருப்பதை அறிந்த பாகிஸ்தான் தனது ஆதரவு நாடுகளை நாடியுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கையை புறக்கணிப்பதாக கூறிய பாகிஸ்தான் துருக்கி சவூதி அரேபியா சீனா ஆகிய நாடுகளை புறக்கணிக்க கோரி அணுகியுள்ளது. இதில் சீனா முந்திக்கொண்டு பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்துள்ளது. மாநாட்டை காஷ்மீரில் நடத்த கண்டனம் தெரிவித்துள்ள சீனா மாநாட்டை புறக்கணிப்பது குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. சீனா உள்ளுக்குள் புகைந்துகொண்டிருப்பதை அதன் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக இந்திய தரப்பில் சொல்லபப்டுகிறது.