24 special

இந்தியர்களை சிறைபிடித்த பாகிஸ்தான்..! இந்தியாவின் ரியாக்சன்..?


புதுதில்லி : பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. அதில் 682 இந்திய மீனவர்களும் 49 பொதுமக்களும் அடங்குவர். அவர்களின் பெயர்பட்டியலை நேற்று பாகிஸ்தான் இந்திய தூரகத்தில் வழங்கியுள்ளது.


தூதரக 2008 ஒப்பந்த விதிகளின்படி இருநாடுகளின் கைதிகள் பட்டியல் வருடத்திற்கு இரண்டுமுறை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 அன்று பரிமாமாறப்படுகின்றன. அதன்படி 682 இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதேபோல 345 பொதுமக்கள் மற்றும் 116 மீனவர்கள் உள்ளிட்ட 461 கைதிகள் பட்டியலை புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியா சமர்ப்பித்துள்ளது.

536 இந்திய மீனவர்கள் மற்றும் தண்டனையை முடித்த பிறகும் சிவில் கைதியாக உள்ள 3 பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு நேற்று இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்கள் என கருதப்படும் 105 மீனவர்கள் மற்றும் 20 சிவில் கைதிகளுக்கு உடனடியாக தூதரக அணுகலை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் " பாகிஸ்தானின் காவலில் இருக்கும் சிவிலியன் கைதிகள் காணாமல்போன இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் திருப்பியனுப்ப இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தண்டனையை முடித்துக்கொண்ட 536 மீனவர்கள் மற்றும் 3 சிவில் கைதிகளை இந்தியாவிற்க்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது" என அந்த அறிக்கையில் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலம் முடிந்தும் பல இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக சிறைவைக்கப்பட்டுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பாகிஸ்தான் இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் அத்துமீறி கைதுசெய்யப்பட்டதாக புலம்பி வருகிறது. பாகிஸ்தானில் பல அமைப்புகளில் பயிற்சிபெற்ற  பயங்கரவாத குழு இந்திய எல்லையில் அடிக்கடி ஊடுருவி நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.