24 special

மக்களே யோசித்து பார்த்தீர்களா? எதிர்கட்சிகளே முடிவு பண்ணிட்டாங்க.. அடுத்த முறையும் பாஜக தான் என்று....

Modi
Modi

கடந்த இரு வார காலமாக அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அதே வேளையில் எதிர்ப்பை காட்டிலும் மிகப்பெரிய ஆதரவு தேசப்பற்று மிக்க இளைஞர்களிடம் இருக்கின்றது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேர்ந்து நான்கு வருடம் பணியாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வம் காட்டி தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். 


ஆனால் எதிர்ப்பவர்கள் குறிப்பிடும் மிக முக்கிய விஷயம், நான்கு ஆண்டுகள் முப்படைகளில் வேலை செய்வதற்கு அனுமதி அளித்தால் இப்போது இருக்கக்கூடிய பாஜகவின் ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் இவர்கள் மட்டுமே வேலைக்கு செல்லக்கூடிய நிலைமை ஏற்படும். இது பாஜகவின் சதி திட்டம் என குறிப்பிட்டிருந்தார்கள்.



அப்படி என்றால் ஒவ்வொரு வருடமும் 40 ஆயிரம் பேர் வேலைக்கு எடுக்கப்படும் போது, அவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்றால் நான்கு வருடங்களை கடந்து இந்தியாவில்  வேறு எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கேள்வி எழும் அல்லவா? அவ்வாறு தற்போது பாஜக இருப்பதினால் இவ்வாறான குற்றச்சாட்டு எழுகிறது என்றால் இனிவரும் காலங்களில் பாஜக மட்டுமே இருக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் வந்ததால்தான் இது போன்ற குற்றச்சாட்டை வைப்பதிலும் ஒரு பொருள் இருக்கக்கூடும்  என்கின்றனர் விமர்சகர்கள். 

இதன் மூலம் பாஜகவினரே எதிர்பாராத வகையில், எதிர்க்கட்சிகள் பாஜகவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வரும் என்றும் அதனை அடுத்தும் பாஜக மட்டுமே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது போல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இதற்கான காரணம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேறு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அந்த நம்பிக்கை இருந்திருந்தால் அப்போது அக்னிபாத்  திட்டத்தில் யாரை உள்ளே எடுக்க வேண்டும் என அன்றைய தினத்தில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்யும் நிலை கூட ஏற்படலாம் என்ற விமர்சனமும் வருகிறது. 

அதாவது பாஜக மத்தியில் இருக்கும்போது ஆர் எஸ் எஸ் காரர்கள் மட்டுமே முப்படைகளில் சேர முடியும் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்றால், வேறு கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அவர்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்ற சந்தேகமும் எழுந்து இருக்கின்றது.

அக்னிப்பாத்  திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் காரணத்தை  முன்வைத்து பார்க்கும் போது அடுத்து மீண்டும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை நிரூபணம் செய்யும் விதமாக இருக்கிறது என்ற  விமர்சனம் இப்போது மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.