24 special

திமுகவை கடுமையாக பேசிய....அதிமுக முன்னாள் அமைச்சர்!

jayakumar, kanimozhi
jayakumar, kanimozhi

சென்னையில் அதிமுக சார்பில் நேற்று பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ககலந்துகொண்டார்.  இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த கூடத்தின் முடிவில் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது காவிரி விவகாரத்தில் உரிமையை பேணி காப்பது அன்றிலிருந்து இன்று வரை ஒரே இயக்கம் என்றால் அது அதிமுக தான்.ஆனால், காவிரி உரிமையை தாரைவார்த்து கொடுத்தது திமுக தான். திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகச் சாடிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காலம் உள்ளது. அதிமுக தலைமையில் நிச்சயமாக மெகா கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் அமைப்பார்.


திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது. நெல்லிக்காய் மூட்டை போல் அந்த கூட்டணியை ஸ்டாலின் வைத்துள்ளார். அது அவிழ்ந்தால் கூட்டணி சிதறும். அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம், திமுக கூட்டணியில் எந்த கட்சியும் உணர்வுபூர்வமாக இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம். என தெரிவித்தது சமூக ஆர்வலர்களிடையே விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணியில் வரக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க மகளிரணி சார்பில், `மகளிர் உரிமை மாநாடு' நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மற்றும் கனிமொழியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி பங்கேற்றனர். இது குருத்து செய்தியாளர் ஜயகுமாரிடம் கேள்வி எழுப்பியதற்கு, திமுகவினர் இப்போது மகளிர் உரிமை என்று மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் மகளிருக்கு எதையும் செய்தது இல்லை.

மாநாடு போடுகிறார்கள் சரி, அக்கட்சியின் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழியை திமுகவால் கட்சித் தலைவராக அறிவிக்க முடியுமா.. பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை தலைவராக அறிவிக்கட்டும் என்று கடுமையாக திமுகவை  சாடினார். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாக முதலில் கையெழுத்துப் போட்டவர் ஜெயலலிதா தான். திமுக இல்லை.. நானும் 1991- 96 காலகட்டத்தில் அமைச்சராக இருந்துள்ளேன். எனக்கு இந்த விவகாரம் குறித்து நன்கு தெரியும். அமைச்சரவை கோப்புகளை எடுத்துக் கூட பார்க்கட்டும். அதில் ஜெயலலிதா கையெழுத்து தான் இருக்கும். ஆனால், இன்று திமுகவினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். உள்ளாட்சி பொறுப்புகளில் 50 சதவிகிதம் பெண்கள் வரவேண்டும் என்று கையெழுத்துப் போட்டவர் ஜெயலலிதா. இன்றைக்கு ஒரு லட்சம் பெண்கள் பதவியில் இருக்கிறார்கள். அதற்குக் கரணம் ஜெயலலிதா" என்று கூறினார்.