மணல் கொள்ளை கடத்தப்படுவதாக தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இருவருக்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் மணல் குவாரிகளின் அதிபர்கள் மேலும் அந்த துறையின் தற்போதைய சில அதிகாரிகள் மற்றும் ஆட்சி அதிகாரிகளின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சென்னை அண்ணா நகரில் உள்ள மணல் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்கள் நுங்கம்பாக்கம் ஏரியா முழுவதும் அதிரடி சோதனையில் அதிகாரிகள் இறங்கினார்கள்.
இவற்றை தொடர்ந்து புதுக்கோட்டை தொழிலதிபர் மற்றும் மணல் குவாரியை நிர்வகித்து வரும் ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்கள் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், திண்டுக்கல்லில் தொழிலதிபராக இருக்கும் ரத்தினம் அவரது வீடு மற்றும் அலுவலகங்கள், அவரின் உறவினர்கள் வீட்டிலும், திருச்சி கொள்ளிடம் மணல் குவாரிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மணல் சேமிப்பு இடங்களிலும், வேலூர் மாவட்டத்தில் பள்ளி கொண்ட பகுதியில் உள்ள மணல் குவாரிகளிலும், ராமச்சந்திரன் என்பதற்கு தொடர்புடைய கரூர் மாவட்டத்தில் உள்ள நன்னியூர், புதூர், நெரூரில் உள்ள மணல் குவாரிகள் என தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் அந்த மணல் குவாரிகளின் உரிமையாளர்கள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரோடு ரெய்டில் இறங்கினர்.
இப்படி பரபரப்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மணல் குவாரி தொடர்புடைய ரெய்டுகளில் மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குவாரிகளில் அளவுக்கு அதிகமான மணல் கையாளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றை கண்டறிவதற்காகவே வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும் சோதனைகளில் பல ஆவணங்களையும் வெளிநாட்டு கரன்சிகளையும் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட மணல் அதிகமாக எடுக்கப்பட்டுள்ள குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது மன விற்பனையை பொருத்தவரையில் தமிழகத்தில் தமிழக அரசு நேரடியாக நடத்தி வருகிறது அரசின் அனுமதி உடன் 2500க்கும் அதிகமான கல் குவாரிகள் கற்களை உடைக்கும் கிரஷர்களும் செயல்பட்டு வருகிறது, இவை அனைத்துமே தமிழக அரசின் கனிமவளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது அதுமட்டுமின்றி தமிழகத்தில் மணல் மற்றும் விலை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாகவும் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாகவும் விற்பனை அளவை கணக்கிடுவதில் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் நான்கில் ஒரு பங்கு தான் கணக்கில் காட்டப்பட்டுள்ளது அதற்காகவே இந்த விலை ஏற்றம் என்றும் மணல், எம்.சாண்ட் போன்றவை கணக்கில் காட்டப்படவில்லை என்றும் கனிமவளத் துறையின் அதிகாரின் ஆதரவுடன் பிளாக் மார்க்கெட்டில் மணல், எம்.சாண்ட் போன்றவற்றை விற்பனை செய்துள்ளனர் என்றும் ரெய்டில் இறங்கிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகளில் வெளியானது. இந்த நிலையில் எப்படி மண்ணில் குவாரியின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை தமிழக அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ள நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திமுக அரசை விழுங்கப் போகும் இமாலய மணற்கொள்ளை. அமலாக்கத் துறையின் அடுத்தடுத்த அதிரடி விசாரணை, தலைமைப் பொறியாளரின் எச்சரிக்கை என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தை தற்போது மேலும் சூடாக்கி உள்ளது அதிலும் குறிப்பாக திமுகவிற்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகளிர் உரிமை மாநாட்டை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அமலாக்க துறையின் பார்வை நம் மீது ஆழமாகிவிட்டதே என்ற கவலையிலும் அறிவாலய வட்டாரங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.