ஜம்முகாஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்டு அந்த மாநிலம் மெல்லமெல்ல இயல்புநிலைக்கு திரும்பிவருகையில் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த இருதினங்களுக்கு முன்னர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஒரு பயணிகள் பேருந்து தீவைத்துகொளுத்தப்பட்டது. இதற்க்கு ஒரு தீவிரவாத குழு பொறுப்பேற்றிருந்த போதும் போலீஸ் வட்டாரங்கள் இது ஒரு விபத்து என அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் பொருட்டு மே 12 அன்று புத்காம் மாவட்ட அரசு அலுவலகத்தின் உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக்கொன்றனர். ராகுல் பட்டின் படுகொலையை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பண்டிட்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தது போலீஸ்.
இதனிடையே ராகுல் கொல்லப்பட்ட ஒருநாள் கழித்து புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ரியாஸ் அஹம்மது அவரது வீட்டிலேயே குடும்பத்தினர் முன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்முவில் கத்ரா அருகே பயணிகள் பேருந்தில் தீவைக்கப்பட்டு நான்குபேர் கொடூரமாக மரணித்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உள்துறைஅமைச்சர் அமித்ஷா உயர்மட்டக்குழுவை கூட்டினார்.
ஜம்முகாஷ்மீர் தொடர் படுகொலைகள் மற்றும் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் உளவுத்துறை பாதுகாப்புத்துறை ஏஜென்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்த அமைச்சர் அமித்ஷா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 30 தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஆயத்தங்களை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். மேலும் தீவிரவாத செயல்களை தூண்டிவிடும் நபர்களை அடையாளம் காணவும் பயங்கரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் சுதந்திரத்திற்கு பிறகான முதல் தேர்தல் என்பதால் பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசமும் இல்லாமல் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னென்ன