
பாகிஸ்தான் இந்திய இராணுவ தளபதியை தொடர்புகொண்டு கெஞ்சியதை தொடர்ந்து இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது , அதன் பிறகு இந்திய அரசியல் களம் மாற தொடங்கியது
இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானத்திற்கு முன் வந்ததை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக விற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகள், 1971 போரில் அமெரிக்காவின் ஆதரவை எதிர்த்து பேசிய இந்திரா காந்தியின் வரலாற்றை நினைவு கூறி அரசை விமர்சித்து வந்தனர். ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள் ஆனால், அதற்குப் பிறகு இராணுவம் வெளியிட்ட தகவல்கள் அரசியல் வட்டாரத்தை வியக்க வைத்தது.
இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் நாசமாகியதாகவும், பாகிஸ்தான் வைத்திருந்த அணு ஆயுத களஞ்சியங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இது போன்ற தாக்குதல் இதுவரை எதுவும் இல்லை என்று கூறப்பட்டதும், இந்தியாவின் இராணுவ வலிமை மிக அதிகமாக வெளிப்பட்டதும் இந்திரா காந்தியை முன்னிறுத்தி பேச வந்த பலரை மவுனம் அடைய வைத்தது.
இதனையடுத்து நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நேரடியாக உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச ஒப்பந்தங்கள், எதிர்கால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைப்பாடுகள் குறித்து வெளிப்படையாக கூறினார்.பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன: பாகிஸ்தானின் பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்தது.
2. பாகிஸ்தானின் அணு மிரட்டல்களை இந்தியா ஏற்காது: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் மிரட்டல்களை இந்தியா ஏற்காது என்றும், இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு உலகிற்கு வெளிப்பட்டது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்பதையும், அதன் பயங்கரவாத முகாம்கள் Bahawalpur மற்றும் Muridke போன்ற இடங்களில் உள்ளன என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். 
4. பாகிஸ்தான் உலக நாடுகளிடம் சமாதானம் கோரியது: இந்தியாவின் தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் சமாதானம் கோரியது என்றும், இந்தியா தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
5. பயங்கரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக நடக்க முடியாது: பயங்கரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக நடக்க முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
6. பாகிஸ்தானின் பயங்கரவாத அடித்தளங்களை அழிக்க வேண்டும்: பாகிஸ்தான் தனது பயங்கரவாத அடித்தளங்களை அழிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
7. இந்தியாவின் புதிய பாதுகாப்பு கொள்கை: ‘ஆபரேஷன் சிந்து’ இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய கொள்கையாகும் என்றும், இது இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு புதிய நிலையாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
8. ‘நரி சக்தி’க்கு அஞ்சலி: இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டின் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்றும், ‘நரி சக்தி’க்கு அஞ்சலி செலுத்தப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.
9. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா தடுக்கிறது: பாகிஸ்தான் இந்தியாவின் பள்ளிகள், கோயில்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்த முயன்றது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை திறம்பட தடுத்தனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
10. புதிய யுத்த நுட்பங்களில் இந்தியாவின் மேன்மை: இந்தியாவின் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள் மற்றும் புதிய யுத்த நுட்பங்களில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும், இது இந்தியாவின் பாதுகாப்பு திறனை வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார்.
இந்திய வரலாற்றில் பாகிஸ்தானை இவ்வளவு நேர்த்தியாக தாக்கிய நிகழ்வு இது முதல் முறையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தொடர்ந்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வரலாற்றில் பேசப்படும் என்பது உறுதி.
உலகத்திற்கு இப்போது இந்தியா செய்த தரமான சம்பவம் வெளிவந்த நிலையில் உள் நாட்டில் விளக்கம் கேட்ட காங்கிரஸ் கட்சியும் உலகில் நாட்டாமை செலுத்த நினைத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வாயை மூடி அமைதியாகிவிட்டனர்.