24 special

ஹைதராபாத் விரைந்த அண்ணாமலை கட்சி தலைமை அழைப்பு... இனி என்ன மாற்றம் உண்டாகும் !

Annamalai and jp nadda
Annamalai and jp nadda

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹைதராபாத் சென்றுள்ளார் கட்சி தலைமை அழைப்பை ஏற்று அண்ணாமலை சென்றுள்ளார்தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐதராபாத் சென்றுள்ளார்.


தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது,தென் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவது குறித்து, இதில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சி தலைமை அழைப்பில், தமிழக பா.ஜ.க , தலைவர் அண்ணாமலை, ஹைதராபாத் விரைந்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முக்கியமாக தென் இந்திய மாநிலங்களான தமிழகம், கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், மேலும் மாநிலங்களில் நிலவும் மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தேசிய தலைமை அண்ணாமலைக்கு சில அசைன்மென்ட் கொடுக்கலாம் எனவும், அதனை அவர் மாநில நிர்வாகிகள் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து நடைமுறை படுத்தலாம் என்று கூறப்படுகிறது, வருகின்ற 5-ம் தேதி தமிழகத்தில் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.