மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேர்ப்பார் என பட்நாவிஸ் அறிவித்தார், இது அரசியலில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது இந்த சூழலில் இது குறித்து சில தகவல்கள் வைரலாகி வருகின்றன.
பெரியசாமி தங்கவேல் என்பவர் குறிப்பிட்டது பின்வருமாறு :-தன் கைவசம் அனைத்துமே இருந்தாலும் தங்களுக்கு மெஜாரிட்டி இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி பதவியேற்று கொள்ளாமல் ஏக்நாத் ஷிண்டே வை சிவசேனாவில் இருந்து முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை இது. ஆட்சியைப் பிடிப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் அந்த மாநிலத்தில் இருக்கவே கூடாது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.
ஏக்நாத் ஷிண்டே அவர்களை முதல்வராக்குவதன் மூலம் சிவசேனா முழுமையாக ஏக்நாத் ஷிண்டே அவர்களின் கையில் வந்து சேரும்.
உத்தவ் தாக்கரே செல்லாக் காசாக்கப்படுகிறார்.இனிமேல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவின் சித்தாந்தம் தான் இருக்கும்.பதவி பெரிதல்ல சித்தாந்தமே பெரிது என்று சென்று கொண்டிருக்கும் கட்சியை யாராலும் அழிக்க முடியாது.
அதனால்தான் ஆரம்பித்து 42 வருடமே ஆன கட்சி இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பித்து 16 வருடங்களில் இந்தியாவின் ஆட்சியைப் பிடித்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியலில் ஈடுபடும் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியால் எதிர்காலத்தில் அடித்து நொறுக்கப்படும் என்பதை உறுதியாக இந்த நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி உலகிற்கு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் பெரியசாமி தங்கவேல்.