24 special

வாய்ப்பை எதிர்பார்ப்பது என் இல்லை..! பிஜேபி தலைவர் பங்கஜா முண்டே..!


மஹாராஷ்டிரா : ராஜ்யசபா எம்பிக்களுக்கான முதற்கட்ட பெயர்பட்டியலை பிஜேபி வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கிய தலைவர்கள் பெயரை பிஜேபி தலைமை குறிப்பிடவில்லை. இருந்தாலும் அந்த தலைவர்கள் தலைமையை எதுவும் விமர்சிக்கவில்லை என்பது பிஜேபியின் கட்டுக்கோப்பான ஜனநாயக அமைப்பை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.


இந்நிலையில் மகாராஷ்டிரா பிஜேபி தலைவர் முண்டே மக்களின் விருப்பமே எனது வலிமை. கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை விரைவில் அறிந்துகொள்வோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது எனது சுபாவம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்ல பல தலைவர்களும் இதே ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா பிஜேபி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா முண்டே தனது தந்தையான கோபிநாத் முண்டேவின் நினைவுதினத்தை முன்னிட்டு பீட் மாவட்டத்தில் உள்ள பார்லிக்கு  வருகை தந்திருந்தார். அப்போது ராஜ்யசபாவில் முண்டேக்கு சீட் வழங்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த முண்டே " எந்த ஒரு வாய்ப்பையும் எதிர்பார்ப்பது என் சுபாவத்தில் இல்லை. மக்களின் விருப்பம் என்னவோ அதுவே எனது பலம். வாய்ப்புக்காக முயற்சிப்பதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வேன். மக்கள் கோபிநாத் முண்டேவின் நினைவகத்திற்கு வருகைதருகிறார்கள். எனது தந்தையிடம் தங்களது அன்பை செலுத்துகிறார்கள். எனது பேச்சுக்காக அல்ல. அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு எனது தந்தை பெயரை சூட்டவேண்டும் என்பது எனது ஆசை.

ஆனால் கோபிநாத் முண்டேவுக்கு நினைவிடம் எழுப்ப யாரிடமும் உதவிகேட்காமல் நானே எழுப்பினேன். எனது ஆசை விரைவில் நிறைவேறும்" என முண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கோபிநாத் முண்டே நினைவிடத்திற்கு நேற்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானும் வந்திருந்தார். அவர் கூறுகையில் ஓபிசி இன மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கோபிநாத் முண்டே. மத்திய பிரதேச அரசிடமிருந்து எந்த உதவி தேவைப்பட்டாலும் அரசாங்க அளவில் அதை செய்ய தயாராய் இருக்கிறோம்" என கூறினார்.

வருகிற ஜூன் 10 நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பியூஸ் கோயல், தனஞ்சய மஹாதிக், அனில் பாண்டே ஆகியோர் மஹாராஷ்டிராவிலிருந்து போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாரஷ்டிரா மாநில தலைவர் பங்கஜா முண்டே பெயர் விடுபட்டிருப்பது மாநில தலைமைக்குள் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.