24 special

சாரி சார் நான் வேணா படிக்கவ... வேட்பு மனு தாக்கலின் போது... அவரு செஞ்சு காரியம் செம்ம டமாசு...

JOHNY TOM VARGHESE
JOHNY TOM VARGHESE

ப்ளீஸ் சார் வேட்பாளர் கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார் அவருக்கு பதில் நான் உறுதிமொழி படிக்கவா என கூட வந்தவர் கேட்க அட சாமி ஒன்றும் வேண்டாம்  நான் படிக்கிறேன்  வேட்பாளரை கூட படிக்க சொல்லுங்கள் என கூறி ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் படிக்க சுயேட்சை வேட்பாளர் அதனை உள்வாங்கி சொல்லி உறுதி மொழி எடுத்துகிட்ட விஷயம் அங்கிருப்பவர்களிடையே சிரிப்பலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்..தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர்  சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் வேட்புமனுவை பெற்றுக் கொண்டார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் வேட்பாளரை உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க வேண்டும் என கூறினார். ஆனால் சிறிது நேரம் சுயேட்சை வேட்பாளர் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தார். உடனே வேட்பாளர் கூட வந்த நபர், சார் ஒரு ஆப்ளிகேசன் சார் என கூறி வேட்பாளர் கண்ணாடியை வீட்டிலே வைத்துவிட்டு வந்துவிட்டார் அவருக்கு பதில் நான் படிக்கவா என கேட்டுள்ளார்..அதற்கு ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான  ஜானி டாம் வர்கீஸ் இது எல்லாம் ஒரு பொழப்பா என்பது போல் அவர்களை பார்த்துவிட்டு சரி நான் படிக்கிறேன் அவரை உள்வாங்கி படிக்க சொல்லுங்கள் என கூறி வேட்பாளரிடம் ஆண்டவன் ஆணையாக கூறுகீர்களா, இல்லை உளமாற கூறுகிறீர்களா என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் உறுதி மொழியை படிக்க வேட்பாளர் அதை உள் வாங்கி சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். வேட்புமனுவின் போது சுயேட்சை வேட்பாளர் கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டதாக கூறியது வேடிக்கையாக இருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு படிக்க தெரியாததால் அப்படி சொன்னார்களா என்ற கேள்வியும் எழுந்தது .. அந்தந்த கட்சிகள்  எதை எதையோ தேர்தல் அறிக்கையாக தயார் செய்து வைத்து மக்களிடம் கொண்டு சேர்த்து வர நிலையில, ஒரு உறுதி மொழியை கூட வாசிக்க தெரியாது கண்ணாடி இல்ல, நீங்க வாசிக்க நான் திருப்பி வாசிக்கிறேன் அப்படி சொல்ற விஷயம் இது எல்லாம் ஒரு பொழப்பு என்பது போல் உள்ளது.