இயக்குனர் பாக்யராஜ் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை பற்றி குரை கூறுபவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும் அவர்களுக்கு தான் நல்லது தெரியாது எனவும் குறிப்பிட்டு கூறி இருந்தார் இதற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பாக்யராஜ் உடன் பணியாற்றிய வேணுகோபாலன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
திரு.கே.பாக்யராஜ் பற்றி, சில காலம் அவருடன் ‘பாக்யா’ இதழில் பணியாற்றியவன் என்ற முறையில் ஒரு சிறு தகவல். பாக்யா இதழ் அச்சேறுவதற்கு முன்புவரை, ஆசிரியர் குழுவிலிருப்பவர்களுக்கு ஒரே ஒரு பதற்றம் தான் இருக்கும். ‘கேள்வி-பதில் பகுதியை எப்போது KBR சார் முடித்துக் கொடுப்பாரோ?’ என்ற டென்ஷன் தான். காரணம், சில கடினமான கேள்விகளுக்கு, பல புத்தகங்களைப் புரட்டி உரிய பதில்களைத் தேர்ந்தெடுத்து, சரியான, பொருத்தமான பதிலைக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெடுவார்.
ஒரு தடவை சஞ்சய் தத் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன்னர், பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எல்லாக் கோணங்களையும் அலசியபிறகு, அச்சேறப்போவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்வரை தகவல்களைச் சேகரித்து, இறுதியாக ‘அவர் அனுதாபத்துக்கு உரியவர் அல்லர்,’ என்ற நான்கு வார்த்தைகள் கொண்ட எளிய பதிலை எழுதிக் கொடுத்தார். இதற்கு ஏன் இந்த மனிதர் நாள்முழுக்க நேரத்தைச் செலவிட்டார் என்று நான்கூட யோசித்ததுண்டு.
எனக்குத் தெரிந்து ஒரு பத்திரிகையின் கேள்வி-பதில்கள் பல தொகுதிகளாக, புத்தக வடிவில் வந்திருக்குமென்றால், அது அனேகமாக ‘பாக்யராஜ் பதில்கள்’ மட்டுமே! காரணம், அவ்வளவு மெனக்கெட்டு அந்தப் பகுதியில் கவனம் செலுத்துவார்.
ஆகவே, அவர் ஒரு விஷயம் சொல்கிறார் என்றால், நிச்சயமாக நிறையவே ‘தகவல்களை’ சேகரித்திருப்பார் என்றே நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்த பாக்யராஜின் கருத்து அவர் ஆராய்ந்து அறிந்து கூறியதாகவே பார்க்க படுகிறது.