24 special

இந்தியாவை சீண்டினால் அதோகதி தான்! டிரம்பை கிழித்து தொங்கவிட்ட அமெரிக்க பத்திரிகையாளர்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

ஒரு காலத்தில் அமெரிக்கா உலக வல்லரசாக விளங்கியது உண்மைதான். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ஜி7 கூட்டமைப்பைவிட பிரிக்ஸ் கூட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது.ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. சர்வதேச அளவில் இந்த 7 நாடுகளின் பொருளாதாரம் 28 சதவீதமாக உள்ளது. அதேநேரம் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 10 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் பொருளாதாரம் 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உலகின் பொருளாதார மையமாக பிரிக்ஸ் உருவெடுத்திருக்கிறது.


அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்பின் வரிவிதிப்பை அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியா ஒன்றும் பள்ளிக் குழந்தை அல்ல, அது ஒரு பெரிய நாடு. ட்ரம்ப் எடுத்த முடிவு அறிவில்லாதது என அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கையாளரான ரிக் சான்சஸ். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," அமெரிக்கா, இந்தியாவை பள்ளிக் குழந்தையை நடத்துவது போல அணுகுகிறது. ஆனால் இந்தியா வளர்ந்து வரும் சக்திவாய்ந்த நாடு. வரலாறு, வளங்கள் மற்றும் திறன்களில் சிறந்தது.

இந்தியாவின் முடிவுகளை மேலோட்டமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. தனது நிலைப்பாட்டை இந்தியா உறுதியாக பின்பற்றுவது பாராட்டத்தக்கது. ட்ரம்ப் எடுத்த முடிவு விவேகமற்றது மட்டுமல்ல, அவமதிப்பானது. ட்ரம்ப் எடுக்கும் பல முடிவுகள், அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு புறம்பானவை. இந்தியா மீது வரி விதித்தது அவரது தனிப்பட்ட கோபம் மற்றும் அரசியல் நோக்கத்தால் எடுக்கப்பட்டது. ரஷ்யா ஏன் உக்ரைனில் போரைத் தொடங்கியது என்பதை புரிந்து கொள்ளாமல் ட்ரம்ப் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

அமெரிக்க தலைவர்களில் பலருக்கும் சர்வதேச பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வதற்கான ஆர்வமோ திறமையோ இல்லை. ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ட்ரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ, இது பிரதமர் மோடியால் நடைபெறும் போர் என்று கூறினார். இது முற்றிலும் அபத்தமானதும் நகைப்புக்குரியதுமான கருத்து. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு பேசுவது அமெரிக்காவின் தரக்குறைவான அணுகுமுறையை காட்டுகிறது" என கூறியுள்ளார்.

மேலும்  அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது ஆகும். இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதன் மூலம் அமெரிக்கா தனது காலில் தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடுகளான சிரியா, லெபனானோடு அமெரிக்காவால் மோத முடியும். இதுபோன்ற சிறிய நாடுகளுடன் மோதுவதால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதே அணுகுமுறையை இந்தியாவுடன் கடைபிடிக்க முடியாது.   அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தவறுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாகவே இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தாலும் அமெரிக்காவிலேயே பலர் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க நீதிமன்றமே டிரம்பின் செயல் சட்ட விரோதம் என தீர்ப்பு வழங்கியிருப்பது அவரது முடிவுகள் சட்டரீதியாகவும் தவறானது என்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.