
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டின் அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் நடத்திய தனித்தனி பேச்சுக்கள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முழு முதற் காரணம் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள கட்டண வரி விதிப்புகள், மற்றும் டிரம்ப் அவர்களின் சுயநலம் தான். கடந்த மாதம் பிரதமர் மோடிக்கு போன் செய்த டொனால்ட் டிரம்ப் தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யும்படி கெஞ்சியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்பதை சொல்லி நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அதனை மோடி ஏற்காததால் தான் இந்தியாவுக்கு டிரம்ப் வரியை தீட்டி உள்ளதாக அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போரில் மூன்றாவது நாடுகளின் தலையீடு எதுவும் இல்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்பதை கூறிவிட்டார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்று ஆணித்தனமாக கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை விதித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை குறைத்து மதிப்பிட்டுவிட்டார், இந்தியாவை சீண்டலாம், இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து அந்த நாட்டிற்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார், அது நடக்கவில்லை. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், வர்த்தக பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது,மேலும் டிரம்ப்பின் இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவைச் சீனாவுடன் நெருக்கமான கூட்டணிக்கு இட்டுச்சென்றுள்ளது .
இந்தநிலையில் தான் இந்தியா சீனா ரஷ்யா கூட்டணி அமைந்துள்ளது இது அமெரிக்காவிற்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அரசியலில் அமெரிக்கா தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அரசியலில் நடக்கும் இந்த மாற்றத்தை அமெரிக்கா உற்றுக் கவனித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவை இத்தனை காலம் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்கா, இப்போது தனது டோனை மாற்றி இருக்கிறது.
அமெரிக்காவும் இந்தியாவும் விரைவில் தங்கள் வர்த்தகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நம்புவதாக அமெரிக்க டிரஸ்சரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்த இரு பெரிய நாடுகளும் இந்தச் சிக்கலைப் பேசி தீர்க்கும்.. . உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. எனவே, எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் உறவு ரஷ்யா, சீனாவை விட நெருக்கமானவை" என்று யூ டர்ன் அடித்துள்ளது அமெரிக்கா.