
பாகிஸ்தான் உடனான மோதலில் பிரம்மோஸ் ஏவுகணை தான் இந்தியாவுக்கு கேம் சேஞ்சராக இருந்தது. பிரம்மோஸ் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது. இதற்கிடையே பிரம்மோஸ் ஏவுகணையைக் காட்டிலும் பலம் வாய்ந்த K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் பணிகளில் இந்தியா இறங்கியுள்ளது.
மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில், 8000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை தான் இந்த கே 6 ஏவுகணை இந்தியா உருவாக்கி வருகிறது. பிரம்மோஸை விட அதிக சக்தி வாய்ந்த இந்த ஏவுகணையால் ஒரே நேரத்தில் முழு பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக சுய சார்பு இந்தியா, மூலம் இராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. தனது வான் பாதுகாப்பு அமைப்பு, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 5வது தலைமுறை ஸ்டெல்த் ரக அதிநவீன போர் விமானங்களை உள்நாட்டிலேயே உலகமே வியக்கும் வண்ணம் தயாரித்து வருகிறது.
தற்போது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் விதமாக இந்தியக் கடற்படை தனது பலத்தை ஆதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானம் தாங்கி கப்பல்கள், அதிநவீனப் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பெரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கிடையே அடுத்தகட்டமாக பிரம்மோஸ் ஏவுகணையை விட பலம் வாய்ந்த K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை இந்தியா ஆரம்பித்துள்ளது.
K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM), இந்தியாவின் கடற்படையை வலிமையாக்க ஒரு முக்கியமான ஆயுதமாக இருக்கும். இது பிரம்மோஸ் ஏவுகணையை விட மேம்பட்ட திறன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற உலக நாடுகளிடம் இருக்கும் ஏவுகணைகளுக்கு இணையானதாக இது இருக்கும். இது வழக்கமான ஆயுதங்கள் மட்டுமின்றி அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதால் இது இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிப்பதாக இருக்கும்.
ஏற்கெனவே, 2,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-3, 3,500 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-4, மேலும் 6,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-5 ஏவுகணைகள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை விடவும் அதிக சக்தி வாய்ந்ததாகும். வழக்கமான வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
K-6 மூன்று-நிலை, திட-எரிபொருள் ஏவுகணையாகும். இந்த அதிநவீன ஏவுகணையின் சிறப்பு அம்சமே Multiple Independently Targetable Re-entry Vehicle என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். இது ஒரே நேரத்தில் பல போர்முனைகளைச் சுமந்து செல்ல உதவுகிறது. மேலும் ஒவ்வொரு போர் முனையும் வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் உடையதாகும்.
கே6 ஏவுகணைக்கு அதன் வேகம் தான் பிரதான பலம்.அதை நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும்போது மணிக்கு 9,261 கிலோமீட்டர் வேகத்தில் (7.5 Mach) தாக்கும் திறன் கொண்டது. இவ்வளவு வேகத்தில் தாக்குவதால் எதிரிகளுக்கு எதிர்வினையாற்றப் போதிய நேரம் இருக்காது. அதாவது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளை அனுப்பி வாலாட்டினால் இதன் மூலம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நொடியில் காலி செய்து, அந்நாட்டின் பொருளாதாரத்தை ஒரே தாக்குதலில் முடக்க முடியும்.
இந்த K-6 ஏவுகணையால் அதிகபட்சம் 8,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க முடியும் எஅதாவது ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எந்த இடத்திலும் இந்தியா நினைத்தால் தாக்க முடியும்.இது முந்தைய வேரியண்டுகளான K-3 K-4 K-5 காட்டிலும் அதிகத் தூரம் சென்று தாக்க முடியும். ஏற்கனவே K-4 மற்றும் K-5 ஏற்கனவே கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. K-6 ஏவுகணையும் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டால் அது புதிய மைல்கல்லாக இருக்கும்.