
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்ட போது பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவை மிரட்ட முயன்றனர். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களைச் சொல்லி மிரட்ட முயன்றனர். இருப்பினும், அது வேலைக்கு ஆகவில்லை. என மார் தட்டி வந்தார்கள் இதற்கிடையே அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விஷயத்திலும் இப்போது பேக் அடித்துள்ளார் இந்தியாவை நாங்கள் மிரட்டவில்லை ந அந்தர் பல்டி அடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நம் நாட்டுடன் ஏற்பட்ட போரில் பாகிஸ்தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்க நமது இன்னொரு எதிரியான சீனாவும் ஒரு காரணம். பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அதன் பாதுகாப்பு துறையில் 81 சதவீத இறக்குமதியை சீனாவிடம் இருந்து தான் மேற்கொள்கிறது. இதனால் சீனா - பாகிஸ்தான் இடையே நெருங்கிய உறவு உள்ளது. பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், பாதுகாப்பு துறை சார்ந்த ஹார்ட்வேர், சாப்ட்வேர்கள் உள்பட பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீனாவின் ஆயுதங்களை நம்பி நம்நாட்டிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. இந்நிலையில் தான் சீனாவிடம் இருந்து 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக இந்த போர் விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்கும் திட்டம் இல்லை என்று பாகிஸ்தான் அந்தர் பல்டியடித்துள்ளது. இதன் பின்னணியில் இந்தியா அடித்த அடி தான் பாகிஸ்தானை பின் வாங்க செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கூட பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து வாங்கிய ஜே-10சி போர் விமானங்கள் மற்றும் பிஎல்-15இ ஏவுகணை மற்றும் ரேடார்களை பயன்படுத்தி தான் முறியடிக்க முயன்றது. ஆனால் நம் நாட்டின் தாக்குதலில் சீனாவின் தயாரிப்புகள் தாக்குப்பிடிக்கவில்லை. இதுதான் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் இருந்து ஜே 35 ரக போர் விமானங்களை வாங்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. உலக அளவில் இது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவின் பின்னணியில் முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் அதிநவீன ரேடார் அமைப்புகள் ரபேல். . அதாவது சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தான் சீனாவின் போர் விமானங்கள், ஏவுகணை, ரேடார், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை நம்பி நம் நாட்டிடம் அடிவாங்கியது. இதனால் பாகிஸ்தானுக்கு சீனா மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இனி சீனாவிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என்று பாகிஸ்தான் நினைக்கிறது.
இரண்டாது காரணம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. மேலும், சிந்து நதி நீரை உள்நாட்டிலேயே பயன்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் மிகப் பெரிய வறட்சி ஏற்படலாம். இதன் காரணமாகவே தொடர்ச்சியாக பாகிஸ்தான் மோதலைத் தவிர்த்து பல்டி அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவைப் பற்றி வாய் திறக்கவே பயப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவுடன் கைகோர்த்தால் நம் கதி அதோகதி தான் என நினைத்து பின் வாங்கியுள்ளது பாகிஸ்தான்.