24 special

சத்தமே இல்லாமல் இந்தியா அடித்த அடி! முடிவுக்கு வந்தது அமெரிக்க டாலரின் ஆதிக்கம்! முடிந்தது கதை

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை உறுத்தும் விஷயங்களில் ஒன்று, 'பிரிக்ஸ்'.பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும்... அமெரிக்க டாலருக்கு எதிராக, அவர்களது நாணயத்தை கொண்டு வருவார்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.


அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிபர் எதிர்பார்த்த நிலையில் அது பெரிய தோல்வியை தான் கொடுத்துள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக என கூறினார்கள்.  இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கண்டுகொள்ளவே இல்லை. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை  அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் சுதேசி பொருட்களை வாங்க அழைப்பு விடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில், இந்தியா BRICS நாடுகளுடன் முழுமையாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தியா தற்போது அமெரிக்காவுடன் பனிப்போர் சூழலில் இருக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கை உலகச் சந்தைகளில் டாலரின் மேலாதிக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது அமெரிக்காவிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் முதுகெலும்பாக டாலரே இருக்கிறது. இந்த டாலரை உலகம் முழுவதும் பொதுவான நாணயமாக மாற்ற அமெரிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. இதைத்தான் பிரிக்ஸ் நாடுகள் எதிர்த்து களமாடியுள்ளன

ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிநாட்டு கரன்சியை கையிருப்பு வைத்திருக்கும். உதாரணமாக இந்தியா அதிக அளவில் அமெரிக்காவின் கரன்சியான டாலரை கையிருப்பு வைத்திருக்கிறது. டாலரை வைத்துதான் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும். ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் டாலர் தேவை. எனவே டாலரை வைத்திருக்கிறோம். இதை அந்நிய செலாவணி கையிருப்பு என்று சொல்லுவார்கள். ஆனால் சமீப காலமாக இந்த டாலர் கையிருப்பை பிரிக்ஸ் நாடுகள் குறைக்க தொடங்கியுள்ளன.

அமெரிக்க டாலருக்க பதிலாக யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற சர்வதேச கரன்சியையும், தங்கள் சொந்த நாட்டு கரன்சியையும் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதைத்தான் 'கையிருப்பு பல்வகைப்படுத்தல்' (Reserve Diversification) சொல்கிறார்கள். இந்தியா பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன

பிரிக்ஸ் நாடுகள் தங்கள் வசம் உள்ள டாலர்களை தாராளமாக வெளியில் எடுத்து செலவு செய்ய தொடங்கியதால், டாலர் எளியதாக கிடைக்கும் ஒரு கரன்சியாக மாறியிருக்கிறது. எளிதில் கிடைக்கிறது எனில் அதன் மதிப்பு இயல்பாகவே சரியும். அப்படித்தான் டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் குறைய தொடங்கியிருக்கிறது. DXY குறியீட்டில் டாலர் 98வது இடத்திற்கு சரிந்திருக்கிறது.

மேலும் உலக அளவில் பெரிய சபையாக கருதப்படும் ஐநா சபையின் முக்கிய அங்கமாக உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்படுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்க வேண்டும்.பாதுகாப்பு வாதம், இறக்குமதி வரி ஏற்ற இறக்கம், வரி அல்லாத தடைகள் போன்றவை வர்த்தக ஓட்டங்களை பாதிக்கின்றன. எனவே, பலதரப்பு வர்த்தக அமைப்பை பிரிக்ஸ் பாதுகாக்க வேண்டும். என உலகத்தை வழிநடத்த இந்தியா அழைத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.