24 special

அமெரிக்காவை நேரடியாக பொளந்து கட்ட தொடங்கிய இந்தியா! களம் மாறுதே அலறும் அமெரிக்கா

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே ஆப்கனிஸ்தான்  விமானப்படைத் தளம் குறித்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


பல ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்து வந்தன. இந்தப் படைகள் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய சில நாட்களிலேயே அங்கிருந்த அரசு கவிழ்ந்தது. தாலிபான்கள் மீண்டும் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்தன.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பக்ராம் விமானத் தளத்தைத் தாலிபான்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்த போது பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா தான் உருவாக்கி இருந்தது. இதைச் சுட்டிக்காட்டி அந்த விமானப்படைத் தளத்தை ஒப்படைக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். இருப்பினும், இதற்கு ஆப்கன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. இந்தச் சூழலில் தான் ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகள் ராணுவத்தை நிறுத்தும் முயற்சிகளுக்கு இந்தியா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில்நடந்த  "மாஸ்கோ ஃபார்மட்" பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானை மேம்படுத்துவது தொடர்பாக விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. அதில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் இந்தியாவும் பங்கேற்றன. தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி, இந்த மாஸ்கோ ஃபார்மட் பேச்சுவார்த்தையில் முதல் முறையாகப் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "வெளிநாடுகள் தங்கள் ராணுவத்தை ஆப்கானிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் நிலைநிறுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவாது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் ஆப்கன் மண்ணில் வெளிநாடுகள் வந்தால் அது அண்டை நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருக்கும். பிராந்திய நாடுகள் மற்றும் பிற நாடுகளுடனும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது அவசியம்" என்று அந்த நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

இந்தியா சொன்ன கருத்து

இந்தக் கூட்டத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா தவிர ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் தூதர் வினய் குமார் தலைமையிலான குழு இதில் பங்கேற்றது. சுதந்திரமான, அமைதியான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளித்த இந்தியா, ஆப்கான் மக்களுக்குச் சமூக-பொருளாதார வளர்ச்சி தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வெளிநாட்டுச் சக்திகள் ஆப்கனில் இருக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசு உழைப்பது வருகிறது என்பது எங்களுக்குப் புரிகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்கன் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவே தெரிகிறது. போதைப் பொருள் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் பகுதிகளையும் குறைத்துள்ளனர்" என்றார்.

போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்றும் ஆப்கான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் லாவ்ரோவ் தெரிவித்தார் 

இந்தியா ரஸ்யா சீனா மூன்று நாடுகளும் அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துள்ளது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. எப்போதும் நடுநிலை வகிக்கும் இந்தியா அமெரிக்காவை நேரடியாக பொளந்து கட்டியுள்ளத. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.