
டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு விதித்த அதிக வரிகள், இரு நாடுகளுக்குமான உறவுகளை பாதித்தது. ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கு அடி பணியாமல் வேறுநாடுகளுடன் தங்களின் வர்த்தகத்தை பதொடர ஆரம்பித்தது இது அமெரிக்காவுக்கு பெரும் இடியை இறக்கியது. மேலும் இந்தியாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் களமிறங்கியது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்தியாவுடனான அமெரிக்க உறவை மீட்டமைத்து சரிசெய்ய வலியுறுத்தி உள்ளனர். டிரம்ப்பின் வரி விதிப்பு, அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாட்டுடனான உறவைச் சேதப்படுத்தியுள்ளது என்று எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 50% வரை வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சித்த டிரம்ப், கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார். அதன் பிறகு ரஸ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகப்படுத்தியது இந்தியா. இதனால், இந்திய - அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் டெபோரா ரோஸ், ரோ கன்னா தலைமையிலான 19 பேர் கொண்ட குழு, வெள்ளை மாளிகைக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்தியாவ உடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்யவும், டிரம்ப் நிர்வாகத்தின் கட்டண உயர்வை திரும்பப் பெறவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வலியுறுத்தியுள்ளனர்.
அக்டோபர் 8 தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்தியப் பொருட்களின் மீதான வரிகளை 50 சதவீதம் வரை உயர்த்திய வரி உயர்வுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடனனான உறவுகளை மோசமாக்கி, இரு நாடுகளுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த முக்கியமான கூட்டாண்மையை மீட்டமைத்து சரிசெய்ய அவர்கள் டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வர்த்தக பங்காளியான இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர், அமெரிக்க உற்பத்தியாளர்கள் செமி கண்டக்டர்கள் முதல் சுகாதாரம் மற்றும் எரிசக்தி வரையிலான துறைகளில் முக்கிய உள்ளீடுகளுக்கு இந்தியாவை நம்பியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டனர். இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளில் ஒன்றை பெறுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய முதலீடுகள் அமெரிக்காவில் வேலை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரிகளை அதிகரிப்பது "இந்த உறவுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்" என்றும், அமெரிக்க நிறுவனங்கள் உலகளவில் போட்டியிடும் திறனை இழப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், டொனால்ட் டிரம்பின் கண்மூடித்தனமான கட்டண அதிகரிப்பு இந்த உறவுகளை பாதிக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக தள்ளும் அபாயம் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பிரிட்டன், ஆஸ்திரேலிய, ஆப்கான் ஜெர்மன் நாடுகளுடன் பலஒப்பந்தங்களை போட்டு வருகிறது இந்தியா, வருகிற டிசம்பர் மாதம் வேறு புடின் இந்தியா வரவுள்ள நிலையில் அமெரிக்காவின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் உள்ளது.