
உலகளாவிய உற்பத்தி துறையில் இந்தியா வேகமாக எழுச்சிகொண்டுவருகிறது.முன்பு வெறும் இறக்குமதி சந்தையாக இருந்த இந்தியா, இப்போது உலகின் புதிய உற்பத்தி சக்தியாக மற்றும் ஏற்றுமதி சக்தி நாடாகமாறியுள்ளது.இந்த மாற்றத்தின் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உழைப்பு, தீர்மானம் மற்றும் தொலைநோக்கு பார்வை முக்கிய பங்காற்றி வருகிறது.
“மேக் இன் இந்தியா”, “உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டம்” மற்றும் “டிஜிட்டல் இந்தியா” போன்ற திட்டங்கள், இந்திய தொழில்துறையை உலகத்தரத்திற்கு கொண்டு சென்று விட்டன.இத்திட்டங்களின் விளைவாக, பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை தங்களின் உயர் மதிப்புள்ள உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதி தளமாகத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தரவு மையத்தை அமைக்கவிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில், தனது தரவு மையத்தை அமைக்கவிருப்பதாகக் கூறிய கூகுள் நிறுவனம், இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தது. இதனால் உலகின் கண்கள் இந்தியா பக்கம் திரும்பியது.
அடுத்ததாக அமெரிக்க நிறுவனம் FORD, தனது சென்னை ஆலைவை உலக சந்தைகளுக்கான உயர் திறன் கொண்ட இஞ்சின் உற்பத்தி மையமாக மறுவடிவமைத்துள்ளது.இங்கே தயாராகும் இஞ்சின்கள் ஆண்டுக்கு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இது “மோடியின் மேக் இன் இந்தியா” கனவு எவ்வாறு நிஜமாகி வருவதை தெளிவாக காட்டுகிறது.
அதேபோல், தொழில்நுட்ப உலகத்தை ஆட்டி படைத்து கொண்டிருக்கும் HP நிறுவனம் தனது அனைத்து லேப்டாப்புகளையும் இந்தியாவில் தயாரிக்க தீர்மானித்துள்ளது.அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்கப்படும் கணினிகளும், ஏற்றுமதிக்குச் செல்லும் கணினிகளும் அனைத்தும் இந்திய ஆலைகளிலிருந்தே தயாராகும்.இது இந்தியாவை உலக மின்னணு உற்பத்தி சங்கிலியின் முக்கிய ஏற்றுமதி மையமாக மாற்றப் போகிறது.
இதற்கிடையில், தென் கொரியாவின் LG நிறுவனம், நொய்டாவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உலக தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.அதோடு, மின்னணு உற்பத்திக்கான மூலப்பொருட்களையும் கொரியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியிலும் உள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்தியாவை வெறும் உற்பத்தி தளமாக அல்லாமல், புதுமை மற்றும் ஆராய்ச்சிக்கான உலக மையமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.அதற்குக் காரணம் — நிலையான அரசியல் சூழல், திறமையான இளம் மனிதவளம், மற்றும் உலக வணிகத் தலைவர்களிடையே இந்தியா மீதான நம்பிக்கை.
இந்தியாவை ஒரு புதிய உற்பத்தி சக்தியாக மாற்றி, உலக தொழில் வரைபடத்தில் பெருமையுடன் நிறுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
திட்டமிட்ட உழைப்பு, தொழில் நண்பன் கொள்கைகள், மற்றும் உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சிக்கான பார்வை இவை எல்லாம் இணைந்து இன்று இந்தியாவை “உற்பத்தி சக்தியாக” மாற்றியுள்ளன.இது வெறும் பொருளாதார வெற்றி அல்ல இது ஒரு புதிய இந்தியாவின் எழுச்சி.
மோடியின் உழைப்பு, நாட்டின் பெருமை,உலகம் தற்போது இந்தியாவை கவனிக்கத் தொடங்கி உள்ளது. “இந்திய உற்பத்தி சக்தியை கண்டு மிரண்டுபோயுள்ளது வல்லரசு நாடுகள்.
