
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றிற்கு இந்தியா மற்ற நாடுகளை சார்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும்என ஊடகங்கள் கதைகளை அள்ளி வீசின..இஸ்ரேல் போர் இந்தியாவை பாதிக்கும் என உருட்டுகளை உருட்டின தமிழக ஊடகங்கள். இந்தியா அரபு நாடுகள் தவிர ரஷ்யாவிடமும் கச்ச எண்ணையை வாங்குகிறது. குறிப்பாக டாலரில் இல்லை இந்தியாவின் ரூபாய் மதிப்பில். அதுமட்டுமில்லாமல்தற்போது மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.
அதாவது அந்தமான் கடலில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதற்காகன அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது."கயானாவில் Hess Corporation மற்றும் CNOOC நிறுவனங்கள் கண்டுபிடித்ததைப் போன்ற ஒரு பெரிய எண்ணெய் வளம் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கண்டுபிடிப்பதற்கு அதிக காலம் ஆகாது ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் 3.7 டிரில்லியன் டாலரிலிருந்து 20 டிரில்லியன் டாலராக மாறும என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் என்றால் போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்தக்கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தது.அப்போது, இந்தியாவின் கைவசம் இருந்த பெட்ரோலிய பொருட்கள், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பெரும் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதன் நிலையில் அமெரிக்க சீனா போன்ற நாடுகள் சுரங்கம் தோண்டி குகை போன்ற அமைப்பில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படுகிறது.. திடீரென நெருக்கடி ஏற்பட்டால் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்தவித நெருக்கடிக்கும் ஆளாக தேவையில்லை. அவசர காலத் தேவையை சமாளிக்க முடியும். என முன்னேற்பாடுகளை செய்தது. வளைகுடா போரில் பெரிய பொருளாதார இழப்புகளை சந்தித்த இந்தியா இது பற்றி ஆலோசனை கூட செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எப்போதும் போல் மெத்தனமாக இருந்துவிட்டது.
1998-ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில்தான் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு பற்றிய முயற்சி முன்னெடுக்கப்பட்டது விஸாகப்பட்டினம் மேங்கலூர் பதூர் போன்ற இடங்களில் சேமிப்பு கிடங்குகளை உருவாக்கியது இந்த இடங்களில் சுமார் 5.33 மில்லியன் டன் எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிஷாவில் சந்திகோல் கர்நாடகாவில் பதூர் (இரண்டாம் கட்டம்) பணிகளை செய்து வருகிறது. தற்போது இந்தியாவிடம் 77 நாட்கள் போதுமான எண்ணெய் கையிருப்பு உள்ளது.இதில் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வைத்திருக்கும் கச்சா எண்ணெய் சேமிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது, இதை மேம்மபடுத்து மேலும் 6 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை அமைக்க தயாராகி வருகிறது.
ஆறு இடங்களில் இதுபோன்ற புதிய இருப்புக்களை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளைஇந்திய தொழில் நுட்ப பொறியாளர் கழகத்திடம் ஆய்வறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு. மேலும் 90 நாட்களுக்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் சேமிக்க முடிவெடுத்துள்ளது இந்தியா. இது ஒருபுறம் இருந்தாலும் வாகனங்களை எலக்ட்ரிக் மயமாக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு வாகனங்கள் அனைத்தையும் மின்சாரமயமாக முடிவுசெய்துள்ளது.