24 special

களத்தில் இறங்கிய இந்தியா .... அரண்டு போன அமெரிக்கா... வரி விதிக்க இதுதான் காரணம் முக்கிய தகவல் வெளியானது...

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ள இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக போருக்கு முக்கிய காரணம் ஒன்று வெளியாக ஆரம்பித்துள்ளது.


அனைவரும் ரஷ்யா உடன் கச்சா எண்ணெய் இந்தியா வாங்குகிறது அதனால் தான் அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது என  அமெரிக்காவே கூறியுள்ளது. இது மட்டுமல்ல காரணம். இன்னொரு முக்கிய காரணம் தற்போது வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது

ஒரு பக்கம் ரஷ்யா–உக்ரைன் போராட்டம்… இன்னொரு பக்கம் ஈரான்–இஸ்ரேல் மோதல். கிழக்கு, மேற்கு என உலக நாடுகள் அனைத்தும் தங்களது எதிரிகளை கண்காணிக்க தீவிரமாக விரும்பும் கால கட்டம் இது.இத்தனை பதட்டத்துக்கு நடுவில், இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பு தோன்றியுள்ளது. அது என்னவென்றால் செயற்கைக்கோள் தயாரிப்பு!

இப்போது ஒவ்வொரு நாட்டுக்கும் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது. இதனால்தான் செயற்கைக்கோள்களை தேடி வருகின்றன. அந்த தேவைப்படும் தரத்தை குறைந்த செலவில் கொடுக்கக் கூடிய நாடு தான் இந்தியா. அதுவும் ISRO மட்டும் இல்ல, தனியார் நிறுவனங்களும் இப்போது இந்த போட்டியில இறங்கி விட்டன.

ஆஸ்திரேலியா, நார்வே, ஹங்கேரி, போலந்து, மேற்கு ஆசிய நாடுகள்… எல்லாம் இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால், இந்தியா அதிக செலவில்லாமல், உயர்தர தொழில்நுட்பத்துடன் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய நாடு.

இதற்காக இந்தியாவின் பெரும்பாலான தொழில்நுட்ப நகரங்களான பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் இருந்து அனந்த் டெக்னாலஜிஸ், திகந்தரா, கேலக்ஸி ஐ ஸ்பேஸ் (GalaxyEye Space) என்ற நிறுவனங்கள் பெரிய பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவிக் கொண்டு, உலக நாடுகளுக்கே தரவை பகிரும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன.

2023-ல் உலக விண்வெளி சந்தை 570 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2035-க்குள் அது 1.8 டிரில்லியன் டாலர் ஆக மாறும் என கணிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் பங்கு 8.4 பில்லியன் அளவில் இருக்கிறது. 2033-க்குள் அதை 44 பில்லியன் டாலர் வரை கொண்டு செல்லும் அளவுக்கு இந்தியா வளரப் போகிறது. அதாவது, இந்தியா உலக சந்தையில் 7%–8% பங்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது!இது இந்தியா அமெரிக்காவிற்கு நிகரான பொருளாதார நாடாக விரைவில் உருமாறும் என்பதற்கான ஒரு முன்னேற்றமான சந்தர்ப்பமாகவே இது இருக்கின்றது.

மேலும் டிரம்ப் - மோடி இடையே 35 நிமிடங்கள் வரை உரையாடல் நடந்தது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று சொல்லி வரும் டிரம்பின் கூற்றை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை. பொதுவாக எங்களுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையேயான பிரச்சனையில் மற்ற நாடுகளை தலையிட வைப்பது இல்லை. இதனால் உங்களின் கூற்றை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது அனைத்தும் தான் இந்தியா மீது வரி போடுவதற்கு முக்கிய காரணம்