24 special

அணு ஆயுதங்களை அதிகரிக்கும் இந்தியா..! கதறும் SIPRI..!


சுவீடன் : கடந்த 2020ம் ஆண்டு மே 5 அன்று கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து சீன மற்றும் இந்திய ஆயுதப்படைகள் அவ்வப்போது எல்லைப்பகுதியில் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் பாங்காங்  ஏரி பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் சீனர்கள் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இதை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதியில் நடக்கும் மோதல்களை தவிர்க்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். அதன்பலனாக  பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைபகுதிகள் மற்றும் கோக்ரா பகுதியிலும் இருதரப்பு வீரர்களும் பின்வாங்கினர்.

இருந்தபோதிலும் 50000 முதல் 60000 வீரர்கள் வரை இரு ராணுவமும் தங்கள் வீரர்களை எல்லைகோட்டு பகுதிக்கருகே நிலைநிறுத்தியுள்ளது. இதன் காரணமாக போர் அச்சம் ஏற்பட்டாலும் இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என இருநாடுகளும் விளக்கமளித்துள்ளன. இந்நிலையில் சுவீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு ஸ்டாக் ஹோமில் செயல்பட்டு வரும் SIPRI (சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்) வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அது தனது அறிக்கையில் "ஜனவரி 2021 முதல் 2022 ஜனவரி காலகட்டத்தில் 350 அணுஆயுதங்களை வைத்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட புதிய ஏவுகணை குழிகளை உருவாகியுள்ளது. சீனா  அணுஆயுதங்களை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதேபோல போர்க்கப்பல்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட அதிகரித்துள்ளது. 

அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அணு ஆயுதங்களை விஸ்தரித்து வருகிறது. இந்தியாவின் அணுசக்தி ஆயுதங்களின் கையிருப்புகள் 156 ஆக 2021ல் இருந்தநிலையில் 2022ல் நான்கு அதிகரித்து 160 ஆக உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் அணுசக்தி கையிருப்பு 165 ஆக உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் நவீன அணுவிநியோக முறையை தொடர்ந்து உருவாகிவருகின்றன.

குறிப்பாக இந்தியா தனது அணுஆயுதங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி வருவதுடன் அணுஆயுத விஸ்தரிப்புகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்தியா தனது ஏவுகணை சோதனைகளை பற்றி தெரிவித்தாலும் ஏவுகணைகளின் அணுசக்தி திறன் மற்றும் அதன் அளவு பற்றி எதுவும் தகவல்கள் வெளியிடவில்லை" என அந்த அறிக்கையில் SIPRI குறிப்பிட்டுள்ளது.