புதுதில்லி : கனத்த மே மாதம் நடைபெற்ற ப்ளை வெயிட் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஹத் ஜரீன் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவரை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது எனது வாழ்வில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து ஜரீன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை 28 அன்று தொடங்க உள்ள பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்ட நிஹாத் விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிஹத் ஜரீன் கூறிய கருத்துக்கள் மதவெறி பிடித்து அலையும் சிலரின் உச்சந்தலையில் நங்கென கொட்டியதுபோல இருந்தது.
அவர் கூறியதாவது " நான் ஒரு விளையாட்டு வீரராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வந்துள்ளேன். ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை. என்னைப்பொறுத்த மட்டில் ஹிந்து முஸ்லீம் என்பது ஒரு பொருட்டே அல்ல. நான் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது சாதனைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன்.
எனது தேசத்திற்காக பதக்கம் வென்றதில் பெருமை கொள்கிறேன். வீரர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் அதிகமாக பங்கெடுக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். அதை கையாள தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் அதிகம் தேவை" என உலக குத்துசண்டை வீராங்கனையான நிஹத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிஹத் கடந்த மே மாதம் துருக்கியில் நடைபெற்ற ப்ளை வெயிட் பிரிவில் தாய்லாந்தை சேர்ந்த ஜிட்பாங் ஜோடாமாஸை 5-0 என்ற நேர்கணக்கில் தோற்கடித்து உலகசாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரதுசமூக வலைதள கணக்குகளில் சிலர் ஏன் குறைவான ஆடை அணிகிறாய். ஏன் ஹிஜாப் அணியவில்லை என தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் தான் நான் நாட்டையே பிரதிநிதித்துவப்படுத்தவந்தேன் என நிஹத்கூறியதாக செய்திகள் வலம்வருகின்றன.