24 special

புது அவதாரம் எடுக்கும் இந்திய விமானப்படையின் Mi-17...!

Indian airforce
Indian airforce

புதுதில்லி : இந்திய விமானப்படையின் பழைய தலைமுறை Mi-17 மீடியம் லிப்ட் ஹெலிகாப்டர்கள் தற்போது மேம்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. நவீன் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் வார்பேர் சூட்டுடன் ஹெலிகாப்டரை மாற்றியமைக்க விமானப்படை திட்டமிட்டுள்ளது.


இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 86 ஹெலிகாப்டர்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் Mi17 ரக ஹெலிகாப்டர்கள் 54 மற்றும் Mi 17 IV 32 ஹெலிகாப்டர்கள் அடங்கும். இந்த மேம்படுத்துதல் ஆனது அதிநவீன மற்றும் மேம்பட்ட மின்னணுப்போர் போர் மற்றும் கண்காணிப்பு சாதனங்களுடன் எம்.ஐ ரக ஹெலிகாப்டர்களை நவீனப்படுத்துதல் ஆகும்.

இந்த மேம்படுத்துதலில் 14 அமைப்புகள் புதிதாக பொருத்தப்பட உள்ளது. Mi 17 ஹெலிகாப்டர்களை 41 இயந்திர அமைப்புக்கள் மற்றும் 67 மின்நிறுவல்கள் Mi 17 IV ரக ஹெலிகாப்டர்களுக்கு 46 இயந்திர மற்றும் 73 மின் நிறுவல்கள் உள்ளதாக இந்திய விமானப்படை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  முன்மொழிந்துள்ளது.

இந்திய விமானப்படை 220 Mi 17 ஹெலிகாப்டர்களை தொடர்ந்து இயக்கி வருகிறது.   பேரிடர் மேலாண்மை நேரத்தில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் முதுகெலும்பாக அமைந்துள்ளது. 1991 ஆம் வருடம் இந்திய விமானப்படை சேவையில் இணைந்த Mi17 முந்தைய M8 க்கு சிறந்த மாற்றாக அமைந்தது. கடந்த 2001ல் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் 1V வகைகளில் 40 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.

இந்த மேம்படுத்துதல் திட்டத்தில் தற்போதுள்ள ஜிபிஎஸ் மாற்றப்பட்டு ரஷ்யாவின் அமைப்பான க்ளோனஸ் ஜிபிஎஸ் சேர்க்கப்படும். மேலும் எச்சரிக்கை அமைப்பு வானிலை ரேடார் ஸ்மார்ட் மல்டி பங்க்சன் டிஸ்பிளே டிராபிக் மோதல் தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்களும் ரேடார் எச்சரிக்கை ரிஸீவரும் பொருத்தப்பட உள்ளன. இதனால் MI 17 ஹெலிகாப்டர் புதுபொலிவடையும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.