24 special

பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை..! மாநில அரசு நடவடிக்கை..?

Jharkhand state school
Jharkhand state school

ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலம் ஜாம்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு வார்டுகளில் செயல்பட்டுவரும் தொடக்கப்பள்ளிகளுக்கு ஞாயிறு விடுமுறைக்கு பதிலாக வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை பலகாலமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பள்ளிகளில் இஸ்லாமிய மக்கள்தொகையை காரணம் கட்டி விடுமுறை விட்டதாக தெரிகிறது.


கார்மடண்ட் மற்றும் நாராயண்பூர் பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் காணப்படுகிறது. அதனால் அந்த பகுதிகளில் இயங்கும் தொடக்கப்பலிகள்ளிகளில் உருது பள்ளிகளின் நடைமுறையை பின்பற்றி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாநில அரசு தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 பள்ளிகளில் இஸ்லாமியர் தவிர பிற சமூக மாணவர்களும் பயின்று வருகின்றனர். இதில் எழுபது சதவிகிதம் இஸ்லாமிய மாணவர்கள் என கூறப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் வெள்ளிக்கிழமை புனித நாளாக கருதி தொழுகையில் ஈடுபடுவதால் பள்ளிகள் வெள்ளியன்று மூடப்பட்டு ஞாயிறன்று திறக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 

மேலும் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் கூட இந்த வார விடுமுறைமாற்றம் பற்றிய குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மாநில கல்வித்துறை தகவலின்படி இந்த ஜாம்ஜாரா மாவட்டத்தில் 1084 பள்ளிகள் இயங்கிவருகின்றன. இதில் 15 பள்ளிகள் மட்டுமே உருதை பயிற்றுவிக்கும் பள்ளிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இருந்தபோதிலும் கிராமக்கல்விக்குழு மற்றும் உள்ளூர் மக்களின் அழுத்தம்காரணமாக பல பள்ளிகள் உருதுப்பள்ளிகளாக கட்டாயப்படுத்தி அறிவிக்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். 

இதுகுறித்து தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய மாநில கல்விச்செயலாளர் ராஜேஷ் ஷர்மா இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் அரசாங்க உத்தரவில்லாமல் பல பள்ளிகள் உருதுப்பள்ளிகள் என பெயர்பலகையை மாற்றிக்கொண்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.