24 special

பிளிட்ஸ்க்ரீக் போர்ப்பயிற்சியில் இந்திய ராணுவம்..! அடங்குமா சீனா..?

Indian and china
Indian and china

லடாக் : இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களால் ஜெர்மன் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  ப்ளீட்ஸ்க்ரீக் போர்பயிற்சிமுறையை லடாக் செக்டர் பகுதியில் இந்திய ராணுவம் ஒத்திகை பார்த்துள்ளது. இந்த பயிற்சி முதல்முறையாக இந்திய ராணுவத்தால் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


GOC-IN- C நார்தெர்ன் கமாண்ட்டின் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திரிவேதி கடந்த வாரம் லடாக்கில் ஐந்துநாட்கள் தங்கியிருந்த உபேந்திரா திரிவேதி ராணுவநிலையின் பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். மேலும் கிழக்கு லடாக் செக்டரில் நடத்தப்பட்ட ப்ளீட்ஸ்க்ரீக் போர்பயிற்சியை மதிப்பீடு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜி ஜெர்மன் ராணுவத்தின் ப்ளீட்ஸ்க்ரீக் தந்திர போர்பயிற்சிகள் டாங்கிகள் மோட்டார்வாகங்களுடன் கூடிய காலாட்படை பீரங்கி மற்றும் விமானப்படையின் மூலம் எதிரியின் பாதுகாப்பை குறுகிய சமயத்தில் தாக்குவது அதேபோல எதிரியின் எல்லைக்குள் நீண்டதூரம் சென்று பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் தாக்குதல் போன்ற செயல்பட்டு திட்டப்பயிற்சியை லடாக் செக்டர் ராணுவநிலைகள் பயிற்சியெடுத்ததாக கூறப்படுகிறது.

லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல் மற்றும் இருதரப்பு தாக்குதல்களை தொடர்ந்து இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் உலகநாடுகள் ஜெர்மன் நாஜிப்படைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டன. அதில் ஒன்றே இந்த தாஹிராம் மிக்க ப்ளீட்ஸ்க்ரீட் போர்ப்பயிற்சி. 

காலப்போக்கில் இந்த பயிற்சிமுறை வழக்கொழிந்து போயிருந்தாலும் இந்திய ராணுவம் எடுத்த பயிற்சிக்கு ப்ளீட்ஸ்க்ரீட் என பெயரிட்டிருப்பது சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது. சூழ்ச்சித்திரன் மிகுந்த இந்த பயிற்சி சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருதரப்பு தாக்குதலில் நமது வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமலேயே வெறும்கைகளால் பல சீன வீரர்களை சொர்க்கத்துக்கு வழியனுப்பி வைத்திருந்தது கவனிக்கத்தக்கது.