ராஜஸ்தான் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாநில அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு 75% சதவிகித இடஒதுக்கீடு தனியார் நிறுவனங்களில் ஒதுக்கும் நடைமுறை பிஜேபி ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் அசோக் கெலாட் " வேலைவாய்ப்பில் தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப இல்லை. இருந்தபோதிலும் மாநில இளைஞர்கள் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதை அரசு பரிசீலித்து வருகிறது.
மற்ற மாநில அரசுகள் இதுகுறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை ஆய்வுசெய்துவருகிறோம். நாடுமுழுவதும் இதுபோல ஒரு சூழல் உருவானால் ராஜஸ்தான் அரசும் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும். அனைவர்க்கும் சமவாய்ப்பு வழங்குவது அரசின் கடமை மற்றும் பொறுப்பு. இந்த எண்ணத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.
மாநில அரசு தற்போது கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கான தனிபட்ஜெட் போல இளைஞர்களுக்கென பிரத்யேகமான பட்ஜெட்டை அரசு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் விவாதங்களை நடத்தி (ஊடகங்கள்) பிற மாநிலங்களில் உள்ள உள்ளதிட்டங்களை முழுமையாக அறிந்துகொண்டு அதில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தாலோ அல்லது உறுதியான ஆலோசனையை வாங்கினாலோ இளைஞர்களை மையமாக கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு தேவையான முயற்சிகளை எடுக்கும்" என ஜெய்ப்பூரில் உள்ள ராஜீவ்காந்தி யூத் எக்சலென்ஸ் சென்டரின் அடிக்கல் நாட்டுவிழாவில் க;கலந்துகொண்ட முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.