புதுதில்லி : சமீபத்தில் டோக்கியோவில் நடந்த குவாட் மாநாட்டில் இந்தியா,ஜப்பான்,ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் இந்தோ பசிபிக் கடற்பகுதியில் சீன ராணுவம் தனது துருப்புக்களை விரிவுபடுத்துவதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த சிலநாட்களிலேயே அமெரிக்காவால் நடத்தப்படும் கடல்சார் போர்பயிற்சியான ரிம் ஆப் பசிபிக்கில் இந்தியா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாதம் ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 4 வரை நடக்க இருக்கும் 28 ஆவது கடற்படை போர்விளையாட்டுக்கள் கோனலாலு மற்றும் சான்டியாகோவில் நடைபெறவுள்ளது. விளையாட்டுகளில் 26 நாடுகள் கலந்துகொண்டு தங்களது வலிமையை வெளிப்படுத்த இருக்கின்றன. அமெரிக்க கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
38க்கும் மேற்பட்ட மேற்பரப்பு கப்பல்கள் மற்றும் நான்கு நீர்மூழ்கி கப்பல்கள், 170 கடற்படை விமானங்கள், ஒன்பதுநாடுகளை சேர்ந்த தரைப்படைகள் 25000 பணியாளர்களுடன் பயிற்சியில் சேர இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த ரிம் ஆப் பசிபிக் 1971களில் அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. கனடா ஆஸ்திரேலியா அமெரிக்க நாடுகள் இதில் முதல்முறையாக கலந்துகொண்டன. முதலில் வருடாந்திரப்பயிற்சியாக இருந்தது காலப்போக்கில் இரண்டாண்டுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட்டது.
இந்த ரிம் ஆப் பசிபிக்கில் முதல்முறையாக 2014இந்தியா கலந்துகொண்டது. அதாவது மோடி ஆட்சிப்பொறுப்பேற்றபின்னரே இது சாத்தியமானது. அந்த நிகழ்வில் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட சிவாலிக் க்ளாஸ் ஸ்டெல்த் போர்க்கப்பலான ஐ என் எஸ் போர்பயிற்சியில் பங்கெடுத்திருந்தது. 2018லும் இதே கப்பல் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. 2016ல் ஐ.என்.எஸ்.சத்புரா பயிற்சியில் கலந்துகொண்டது.
சீனத்தொற்றின் காரணமாக 2020 ல் நடந்த போர்பயிற்சியில் 10 நாடுகளும் 22 போர்கப்பல்களும் அதில் 5300 பணியாளர்கள் மட்டுமே பங்குகொண்டனர். தற்போது நடக்கவிருக்கும் இந்த போர்பயிற்சியில் இந்திய தரப்பில் கலந்துகொள்ளவிருக்கும் கப்பல்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனினும் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் இந்திய கப்பற்படையுடன் இணைந்து மலபார் கடல்சாற்பயிற்சியில் ஜப்பானின் JMSDF மற்றும் ஆஸ்திரேலியாவின் RAN மற்றும் அமெரிக்க கப்பற்படை இணைந்து கடற்போர் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.