24 special

மாவோயிஸ்டுக்களை குறிவைக்கும் மோடி..! கதறும் கம்யூனிஸ்டுகள்..?

modi
modi

புதுதில்லி : மாவோயிஸ்டுகள் மீது மோடி அரசு  தாக்குதலை அதிகரித்திருப்பதாக கம்யூனிஸ்டுகள் புலம்பிவருகின்றனர். மேலும் மாவோயிஸ்டுகளின் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் மத்தியக்குழு கடும்கண்டனங்களை எழுப்பியுள்ளது. சட்டீஸ்கர் காவல்துறை மற்றும் கோப்ரா சிஆர்பிஎப் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை உதவியுடன் ஏப்ரலில் தெற்கு பஸ்தாரில் மாவோயிஸ்டுகள் மீது பலதாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் கதறிவருகின்றனர்.


CPI மாவோயிஸ்டுகள் மத்தியக்குழுவின் செய்தித்தொடர்பாளர் அபய்  வெளியிட்டுள்ள அறிக்கையில் " கடந்த ஏப்ரல் 15 அன்று அதிகாலை ஒரு மணியளவில் PLGA (மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம்) மற்றும் பழங்குடியின மக்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்புகள் குறிவைத்து தாக்கினர். வான்வெளி குண்டுவீச்சில் அதிக அளவில் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. பழங்குடியின மக்களின் தானியகிடங்குகள் குண்டுவீசி அழிக்கப்பட்டது.

PLGA மற்றும் பழங்குடியின மக்கள் போதுமான விழிப்புணர்வுடன் இருந்ததால் பலத்த சேதம் தவிர்க்கப்பட்டது. பலர் தப்பினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறை மற்றும் ராணுவம் நடத்திய மோடியின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் இது. 

இது வான்வெளி பயங்கரவாதம். ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டுமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தாக்குதல் ஏப்ரல் 19 அன்று நடத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் வாக்குகளை வைத்து ஆட்சிக்கு வந்த சட்டீஸ்கர் முதல்வர் பாதுகாப்புப்படைக்கு உதவியது துரதிர்ஷ்டவசமானது. வான்வெளி தாக்குதல் மனிதாபிமானமற்றது.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். PESA விதிகளின்படி பழங்குடியின மக்களின் அனுமதியை பெறாமல் ராணுவ அமைப்பை நிறுவுவது கண்டிக்கத்தக்கது" என மாவோயிஸ்டுகளின் செய்தித்தொடர்பாளர் அபய் தெரிவித்துள்ளார்.  உலகிலேயே தீவிரவாத அல்லது தடைசெய்யப்படக்கூடிய அமைப்பை கொண்டாடுவது கம்யூனிஸ்டுகளே என்பது இதன்மூலம் தெரியவந்திருப்பதாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் விமர்சித்து வருகின்றனர்.