24 special

இந்திய நிறுவனத்தின் 200 ஆவது பல்பீர் கப்பல்..! இவ்வளவு விஷயம் இருக்கா..?


விசாகப்பட்டினம் : இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் HSL கடந்த செவ்வாய்கிழமை தனது 81 ஆவது ஆண்டுவிழாவை கோலாகலமாக கொண்டாடியது. எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல்கட்டும் சேவையில் ஈடுபட்டுவரும் HSL தனது 200 ஆவது கப்பலான பல்பீர் கப்பலை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளது.


மேலும் 200 கப்பல்கள் மற்றும் அதற்க்கு அப்பாலும் என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது. தற்போது HSL தனது பாதையை திருத்தியமைத்துக்கொண்டு மேம்படுத்தப்பட்ட புதிய HSL ஆக உயர்ந்துநிற்கிறது. மேலும் கடந்த சிலவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் அதன் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது. மேலும் சிறுகுறு தொழில்களுக்கு ஒரு பரந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

HSL ஆல் நிர்மாணிக்கப்பட்ட 200 ஆவது கப்பலான பல்பீர் கப்பலை இந்திய கடற்படைக்கு அர்ப்பணித்துள்ளதுடன் நாட்டின் 2000ஆவது பழுதுபார்க்கப்பட்ட போர்க்கப்பலான எஸ்சிஐ பவன் ஐ ஆஸாதிகா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு அர்ப்பளித்துள்ளது. 50 டன் பொல்லார்டு புல் டக் பல்பீரின் கட்டுமானத்திற்காக இந்திய கப்பற்படை ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தது.

இந்தியன் ரிஜிஸ்டர் பார் ஷிப்பிங் எனப்படும் IRS கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இந்த பல்பீர் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பல் விமானம் தாங்கி கப்பலாக செயல்படும். மேலும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரியவகை கடற்படை கப்பல்கள் தங்குவதற்கும் அன்பெர்த் செய்வதற்கும் திருப்புவதற்கு தந்திர வேலைகளில் ஈடுபடுவதற்கும் பயன்பட இருக்கிறது.

மேலும் கப்பல்களுக்கு அருகில் நங்கூரமிட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பல்பீர். இந்த கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள சிறுகுறு உற்பத்தியாளர்களிடம் பெறப்பட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை கொண்டே  வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பல்பீரின் சிறப்பு.