புதுதில்லி : DRDO நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதன் சமீபகால வளர்ச்சி இந்திய பாதுகாப்பு படைகளுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உலக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவின் CASDIC (காம்பாட் ஏர்க்ராப்ட் சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட் அண்ட் இன்டக்ரேசன் சென்டர்) DRDO அமைப்பின்கீழ் அமைக்கப்பட்டுள்ள ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மையங்களால் SU- 30 விமானத்தில் மின்னணு போர்த்தொகுப்பை ஒருங்கிணைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது AEA எனப்படும் வான்வழி மின்னணுத்தாக்குதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்னணு தாக்குதல் மூலம் எதிரி போர்விமானங்களை நடுவானில் நிலைகுலைய செய்யமுடியும். இந்த ஏர்போர்ன் எலக்ட்ரானிக் அட்டாக் எதிரிகளின் இயங்குதளங்கள் ராடார்கள் மற்றும் தகவல்தொழில்நுட்ப தொடர்புகள் மற்றும் பெரிய அளவிலான ராணுவ மின்னணு அமைப்புகளை சீர்குலைக்கவல்லது. அதேபோல எதிரிகளின் பாதுகாப்பு முறையை உணரும் திறன் கொண்டதுடன் அதை அடக்கும் வழிமுறைகள் கொண்ட தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது.
இந்த SU 30 போர்விமானம் தந்திரோபாய நெரிசல் காய்நகர்வுகள், தகவல் தொழில்நுட்பம் குறித்த எதிர் அளவீடுகள், எலக்ட்ரானிக் வார்பேர் ரிஸீவர் தொகுப்பு, உயர்செயல் திறன்கொண்ட சென்சார் அமைப்புக்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கருதப்படுகிறது. கடந்த 2021ல் இந்திய விமானப்படை மற்றும் DRDO இணைந்து சு-30க்கான தொழில்நுட்பதேவைகளை உருவாக்கி வருகிறது.
இந்த SU 30 எதிரிகளின் வான்வெளி பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் தரை ரேடார்களை ஏமாற்றி செயல்படவல்லது. அதேபோல அதிக எண்ணிக்கையில் எல்லைக்குள் நுழையும் போர்விமானங்களை கண்டராய்ந்து தாக்கவல்லது.