24 special

ராணுவ உபகரண ஏற்றுமதியில் இந்தியா சாதனை..!


புதுதில்லி : இந்தியா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் விமானங்கள் டேங்குகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதுபோல ஏவுகணைகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்திய DRDO நிறுவனத்தின் எழுச்சிக்கு பிறகு ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


2021-22 நிதியாண்டில் மட்டும் 13000கோடிகள் மதிப்பிலான ராணுவ உபகரங்களா மற்றும் தொழில்நுட்ப அமைப்புக்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது ஒரு நிதியாண்டில் அதிகபட்ச ஏற்றுமதி என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2020ல் ஆண்டுக்கு 5பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி  25 பில்லியன் என இலக்கை நிர்ணயித்திருந்தது.

பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய்குமார் கூறுகையில் ராணுவங்களின் பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி விவரங்களுக்கு கணக்கிடப்படுகின்றன என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேபோல பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சாஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

" இந்த 2021-22 ம் நிதியாண்டில் நடைபெற்றுள்ள ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட எட்டு மடங்கு அதிகரித்திருப்பது இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி நகர்ந்துவருவதை எடுத்துக்காட்டுகிறது. இதில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்றுமதி சந்தையில் 90 சதவிகிதம் பங்கை கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றன.

கடந்த நிதியாண்டில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் சிறப்பாக பங்காற்றியிருந்தன. கடந்த ஆண்டு ஏற்றுமதி பங்களிப்பில் பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவிகித பங்கை அளித்திருந்தன" என ஜாஜு தெரிவித்தார். இதனிடையே சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இந்த 2022 மார்ச்சில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

சர்வதேச ஆயுதபரிமாற்றங்களின் போக்குகள் எனும் தலைப்பில் வெளியிட்ட அந்த அறிக்கையில் மியான்மர் இலங்கை, ஆர்மீனியா நாடுகளுடன் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் இந்தியா 23 ஆவது இடத்தில் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது. மேலும் தற்போது இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகள் இந்திய ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் போடவிருப்பதாக சொல்லப்படுகிறது.