24 special

எவ்வளவு பெரிய "டைரக்டர் மணிரத்தினம்" அவரை போயி இப்படி சொல்லிடீங்களே !

Maniratnam , Suhasini Maniratnam
Maniratnam , Suhasini Maniratnam

நேற்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்பட டீசர் நிகழ்ச்சி மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது, தமிழில் நீண்ட நாட்களாக பான் இந்தியா திரைப்படம் ஹிட் கொடுக்காத நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த சாதனை படைக்கும் என்று நம்ப படுகிறது.


இந்த சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணி ரத்தினம் இதற்கு முன்னர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் அதன் கதைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன, இது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு பின்வருமாறு :-

மவுன ராகத்துல ஹீரோயினி first லவ்வர நினைச்சுட்டு கட்டுன புருஷன் கூட வாழாம அப்புறம் வாழ்ந்து தான் ஆகணும் போலனு வாழுது நாயகன்ல மேட்டர் போன இடத்துல ஒரு பெண்ணை கட்டிக்குறார்.

அக்னி நட்சத்திரத்துல ரெண்டு பொண்டாட்டியோட பசங்க அடிச்சுக்கிறாங்க தளபதில கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே ஹீரோ அம்மா கன்னி களிச்சிடுறாங்க. அண்ணன் ரஜினி காதலிச்ச பொன்ன தம்பி அரவிந்சாமி கட்டிகிறாரு. அண்ணன் ரஜினி விதவைய கட்டிகிறாரு ரோஜாவுல அக்காவை பொண்ணு பார்க்க போய் தங்கச்சியை புடிச்சிடுறானுங்க,இருவர்ல சரி அது பெரிய கதை, அலைபாயுதேல வீட்டுக்கு தெரியாம தாலி கட்டி வாழ்றாங்க 

ஆயுத எழுத்துன்னு ஒரு படம். சித்தார்த் வெளியூர் படிக்க போய்ட்டு வீட்டுக்கு வர்ரவரைக்கும் முத்தம், ரயில் கக்கூசில் கூட முத்தம் கருமம். சூரியா அப்பவே லிவின் ரிலேஷன் - திருமனம் கடந்த உறவு அறிவுருத்துவாரு. 

ராமாயணத்தை தழுவி எடுக்கிறேன்னு ராவணன் எடுத்து அதுல சீதையை சரி படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க கடல்ன்னு ஒரு சினிமா.. ச்ச்சீ ச்ச்சீ. ஒ காதல் கண்மனி பட டைட்டில ஓக்கே கண்மணின்னு சொன்னாங்க. அது ஏன்னு படம் பார்த்த அப்பறம் தான் பிரிஞ்சது. கல்யாணம் செய்யாமல் செய்யும் கதை.

இதுவரை கள்ள உறவுகளை மையமாக கொண்டே திரைப்படத்தை இயக்கி இருக்கும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்ன செய்து வைத்து இருக்கிறார் என்பதை படம் வெளியானால் மட்டுமே தெரியவரும் என அந்த பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வளவு பெரிய இயக்குனர் என ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மணி ரத்தினத்தை இப்படி கள்ள காதல் கதைகளின் இயக்குனர் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து இருப்பது  பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.